கொரோனா நெருக்கடி.. ஜிஎஸ்டி வேற அதிகரிப்பு.. OEMக்களுக்கு இது சவாலான நேரம் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களை பாடாய் படுத்தி எடுத்து வரும் கொரோனாவினால் அடித்தட்டு மக்களும், நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே கூறலாம்.

உலகின் பெரும்பாலான பகுதிகள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், உலகமே கொரோனாவினால் தத்தளித்து வருகிறது. ஏனெனில் மக்கள் வீடுளுக்குள் முடங்கி கிடக்கும் நிலையில், தங்களது அத்தியாவசிய தேவைக்கே கஷ்டப்படும் நிலையில், ஸ்மாரட்போன் என்பது அத்தியாவசியமற்ற பொருளாகத்தான் கருதப்படுகிறது.

ஆக பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் துறையானது பெருத்த அடி வாங்கலாம் என்றும் கருதப்படுகிறது.

மிக மோசமாக பாதிப்பு

மிக மோசமாக பாதிப்பு

உலகளவில் பரவி வரும் கொரோனாவினால் ஸ்மார்ட்போன் தேவையானது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், விற்பனையும் பாதாளத்தினை நோக்கி சென்றுள்ளது. ஏனெனில் லாக்டவுன் சமயத்தில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே ஆர்வம் காட்டி வரும் வருகின்றனர், இதனால் ஸ்மார்ட்சந்தையும் மிக மோசமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

இதிலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவெனில், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் லாடவுன் முடிந்த பின்னர் தேவை அதிகரிக்கலாம் என்று நம்புகின்றனர். எப்படி எனினும் இந்த ஆண்டின் பிற்பகுதி வரையில் மூலதன பொருட்கள் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விற்பனை எப்போது சீரடையும்

விற்பனை எப்போது சீரடையும்

இதெல்லாவற்றையும் விட ஸ்மார்ட்போன்களை வாங்கும் நுகர்வோரின் நிலை சீரடைய சில காலம் ஆகலாம். ஏனெனில் லாக்டவுனால் பலர் வேலையிழந்துள்ளனர். அவர்களின் நிதி நிலைமை நிச்சயமற்றதாக உள்ளது. ஆக ஸ்மார்ட்போன் விற்பனையில் சற்று பாதிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஊக்குவிப்பு நடவடிக்கை

ஊக்குவிப்பு நடவடிக்கை

மேலும் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு சந்தை மீண்டும் திறக்கப்படும் போது, அனைத்து OEMsகளும் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் சேனல்களை பெரிதும் ஊக்குவிப்பதன் மூலம், இந்த இடைப்பட்ட காலத்தினை நிவர்த்தி செய்ய முற்படலாம் என்றும் Counterpoint Researchன் ஆராய்ச்சி இயக்குனர் நீல் ஷா கூறியுள்ளார்.

விற்பனை தொடங்கலாம்

விற்பனை தொடங்கலாம்

மேலும் ஏறக்குறைய அனைத்து முக்கிய முன்னணி தொலைப்பேசி பிராண்டுகளும் தங்களுது புதிய பிராண்டுகளை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக விவோ, ஓப்போ, ரியல்மி, ஜியோமி உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களது புதிய தோற்றுவிப்புகளை நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா நிலைமை கட்டுக்குள் வரலாம். இதன் மூலம் விற்பனையை மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக நீல் ஷா தெரிவித்துள்ளார்.

தள்ளுபடியை கொடுக்கலாம்

தள்ளுபடியை கொடுக்கலாம்

கொரோனா பீதி மட்டும் அல்ல, ஏப்ரல் 1 முதல் மொபைல் போன்களுக்கான ஜிஎஸ்டி விகிதமும் 6% அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆக இது ஸ்மார்போன் உற்பத்தியாளர்களுக்கு இன்னும் சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் கொரோனாவுக்கு பின்பு பண்டிகை காலத்தில் மீண்டும் உற்பத்தியாளர்கள் மீண்டு தள்ளுபடியை கொண்டு வரலாம். அப்போது விற்பனையை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smartphone industry also now in challenging time

Smartphone consumers will only buy a phone out of necessity or maybe settle for a refurbished one depending on their spending ability. so Smartphone makers faces challenging tasks.
Story first published: Wednesday, April 15, 2020, 13:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X