சேமிப்புக்கு பெயர் போன இந்தியாவா இது? அதுவும் இந்த ஒரு பொருள்னால இவ்வளவு மாற்றமா?

இந்தியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் புது புது மாடல் ஸ்மார்ட் ஃபோன்கள் வந்த உடனேயே தங்கள் கைகளில் இருக்கும் ஃபோன்களை அப்கிரேட் செய்துவிடும் பழக்கம் அண்மை காலமாக அதிகரித்து இருக்கிறது. அதாவது ஒரு மொபைல் போனை வாங்கி பயன்படுத்துகிறார்கள் அதன் அடுத்த வெர்ஷன் வந்த உடனேயே இதனை விற்பனை செய்துவிட்டு அந்த புதிய மாடலை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

இஎம்ஐ போன் வாங்கும் போக்கு இந்தியாவில் அதிகமாகவே காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஆப்பிள் ஐபோன் போன்ற ப்ரீமியம் ஃபோன்களை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இஎம்ஐ மூலமாகத்தான் போன்களை வாங்குகிறார்கள். ஆனால் இவ்வாறு கடன் மூலம் ஸ்மார்ட் போன் வாங்கக்கூடிய நபர்கள் அவற்றை திரும்ப செலுத்துவதில்லை என்ற ஒரு புகார் எழுந்து இருக்கிறது.

சேமிப்புக்கு பெயர் போன இந்தியாவா இது? அதுவும் இந்த ஒரு பொருள்னால இவ்வளவு மாற்றமா?

சர்வதேச அளவிலான ஆப்பிள், சாம்சங் போன்ற பல்வேறு நிறுவனங்களின் மிகப்பெரிய ஒரு ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையாக இந்தியா திகழ்கிறது. போட்டி போட்டுக் கொண்டு இந்த நிறுவனங்கள் புது புது மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து விற்பனை செய்கின்றன. இவ்வாறு இந்த போன்களை விற்பனை செய்யக்கூடிய ஈ காமர்ஸ் தலங்கள் ஆகட்டும் அல்லது நேரடி விற்பனை நிலையங்களாகட்டும் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ முறையில் போன்களை வாங்கக்கூடிய ஒரு வாய்ப்பினை வழங்குகின்றன.

இது இளைஞர்களுக்கு சாதகமாக மாறி இருக்கிறது. புதிதாக ஒரு மாடல் போன் வந்தால் உடனடியாக இஎம்ஐ முறையில் வாங்கி தங்களுடைய போன்களை அப்கிரேட் செய்து கொள்கிறார்கள். ஆனால் இவ்வாறு போன்களுக்காக வாங்கக்கூடிய கடன்களை பலரும் திரும்ப செலுத்துவதில்லை. வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஈஎம்ஐ முறையில் போன்களுக்காக வழங்கப்பட்ட கடன் பணம் திரும்ப வராமல் இருக்கும் விகிதம் என்பது 2 .9 சதவீதமாக இருக்கிறதாம். பொதுவாக இது இரண்டு சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2.9 சதவீதமாக அதிகரித்து இருக்கிறதாம்.

சேமிப்புக்கு பெயர் போன இந்தியாவா இது? அதுவும் இந்த ஒரு பொருள்னால இவ்வளவு மாற்றமா?

நிதி நிறுவனங்கள் தற்போது போன்கள் மீது இஎம்ஐ வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கிவிட்டன. நல்ல கிரெடிட் ஸ்கோர் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே குறைந்த வட்டியில் அல்லது நோ காஸ்ட் இஎம்ஐ போன்ற முறைகளில் கடன் வழங்குவதற்கு முன் வருகின்றன. பல்வேறு மாநில அரசுகளும் நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களிடம் சென்று பணத்தை வசூல் செய்வதற்கு அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதுவும் நிதி நிறுவனங்களுக்கு தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட் போன்களுக்காக வழங்கப்படும் கடன்களின் விகிதம் என்பது உயர்ந்து வருகிறதாம் . ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஸ்மால் மொபைல் போன் வாங்குவதற்காக வழங்கப்பட்ட கடன்களில் 2.7 முதல் 2.9% கடன்கள் அதாவது திரும்ப வருவதில்லை என எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டிருக்கும் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படக்கூடிய மூன்றில் ஒரு ஸ்மார்ட் போன் கடனில் தான் வாங்கப்படுகிறது . ஆனால் இது இந்த போக்கு தற்போது கடன் வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது. கன்சியூமர் டியூரபில் பிரிவில் வாங்க கடன்களில் பெரும்பாலானவை ஸ்மார்ட் போன் வாங்குவதற்காக தான் பயன்படுத்தப்படுகிறது .கடன் அளவு 10,000 முதல் 25,000 ரூபாயாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 25,000 முதல் 50,000 ரூபாய் என உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+