மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மோதிலால் ஆஸ்வால் வரி சேமிப்பு ஃபண்டில் முதலீடு செய்துள்ளார். இது ஒரு ஈக்குவிட்டி லிங்க்டு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் ரூ.1.5 லட்சம் வரை வருவான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் விலக்கு அளிக்கிறது.
மக்களவைத் தேர்தலில் ஸ்மிருதி இரானி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்திரா குடும்பத்தின் செல்வாக்கு நிறைந்த இந்தத் தொகுதியில் 2019இல் ராகுலை ஸ்மிருதி தோற்கடித்தார்.

அவரது வேட்புமனுவில் ஸ்மிருதி சில மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் மட்டுமல்லாமல் அவரது கணவர் ஜுபின் இராணியும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்துள்ளார். அவரது வேட்பு மனுவில் ஸ்மிருதி ரூ.17 கோடி சொத்து வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் மேக்னம் மிட்கேப் பண்டில் முதலீடு செய்துள்ளார். இந்த மியூச்சுவல் பண்டில் அவர் முதலீடு செய்த தொகையின் சந்தை மதிப்பு ரூ.23.29 லட்சம் ஆகும். இது தவிர கோடக் எமர்ஜிங் பண்டு, மோதிலால் ஆஸ்வால் வரி சேமிப்பு பண்டிலும் முதலீடு செய்துள்ளார்.
கோடக் எமர்ஜிங் பண்டில் அவர் செய்துள்ள முதலீட்டின் மார்க்கெட் மதிப்பு ரூ.1,48,267 ஆகும். மோதிலால் ஆஸ்வால் பண்டில் ரூ.18,18,419 உள்ளது.
மோதிலால் ஆஸ்வால் வரி சேமிப்பு பண்டும் ஒரு ஈக்குவிட்டி லிங்க்டு சேமிப்பு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக 22.81 சதவீதம் வருவாய் வந்துள்ளது. இருப்பினும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் வருவாயில் இது 28.33 சதவீதமாக உள்ளது.
Motilal Oswal Tax Saver Fund-ன் மொத்த மதிப்பு ரூ. 3,424.50 கோடி, இதன் நேரடி திட்டத்தின் மொத்த நிகர சொத்து மதிப்பு ரூ. 50.0217 கோடியாக உள்ளது. ஸ்மிருதி இரானி முதலீடு செய்துள்ள பிற மியூச்சுவல் பண்டுகள் என்றால் எஸ்பிஐ புளூ சிப் பண்டு மற்றும் டிஎஸ்பி டைகர் பண்டு ஆகும்.
எஸ்பிஐ புளூ சிப் பண்டில் அவரது முதலீட்டின் சந்தை மதிப்பு ரூ.18.61 ஆக உள்ளது. டிஎஸ்பி டைகர் பண்டில் ரூ.67,934 ஆக உள்ளது. டிஎஸ்பி ஓவர்நைட் பண்டில் ஸ்மிருதி இரானி முதலீடு செய்துள்ளதன் சந்தை மதிப்பு ரூ.9.127 ஆகும். இதுதவிர எஸ்பிஐ-ஃபோகஸ்டு ஈக்விட்டி ஃபண்டிலும் ஸ்மிருதி முதலீடு செய்துள்ளார். அதன் சந்தை மதிப்பு ரூ.1,23,943.
அவரது கணவர் ஜூபின், எச்டிஎப்சி ஸ்மால் கேப், மோதிலால் ஆஸ்வால் ஃபிளக்சி கேப் பண்டு, மோதிலால் ஆஸ்வால் ஈஎல்எஸ்எஸ் ஃபிளக்ஸி டாக்ஸ் சேவர் பண்டு, நிப்பான் இந்தியா இடிஎப் லிக்விட் சீட் பண்டு ஆகியவற்றிலும் முதலீடு செய்துள்ளார்.
இந்த முதலீடுகள் தவிர, மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழிலும் ஸ்மிருதி முதலீடு செய்துள்ளார். இது பெண்களை மையப்படுத்திய அஞ்சல் அலுவலக திட்டமாகும். இந்தத் திட்டம் பெண்களை சிறுசேமிப்பு செய்து அவர்களின் நிதி ஆரோக்கியத்தை வலுப்படுத்த ஊக்குவிக்கிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications