மக்களே உஷார்.. இதுக்கு துணை போனீங்கனா உங்க ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்

சென்னை: ரேஷனில் அரிசி வாங்கி அதனை முறைகேடாக வெளியில் விற்பனை செய்பவர்களின் ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் வாயிலாக தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வறுமைநிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ ரேஷன் அரிசி வழங்கப்படுகிறது.

மக்களே உஷார்.. இதுக்கு துணை போனீங்கனா உங்க ரேஷன் கார்டு ரத்தாகிவிடும்

இவ்வாறு ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவர்கள் அவற்றை வெளிச்சந்தையில் கிலோ ரூ.5 என்ற விலையில் விற்பனை செய்கின்றனர். அதனை வாங்கும் நபர்கள் கடைகளுக்கும், மாவு மில்களுக்கும், அரிசி மில்களுக்கும் விற்பனை செய்கிறார்கள். சில சமயங்களில் இது அண்டை மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

இவ்வாறு ரேஷன் அரிசியை வாங்கி பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது வாடிக்கையாகிவிட்டது. இது தொடர்பாக அரசுக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு கூட எட்டயபுரம் பகுதியில் காவல்துறையினர் 11 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதேபோல கயத்தாறு அருகே மினி லாரியில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாறு ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி இட்லி மாவு அரைத்து கடைகளுக்கு விநியோகம் செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரேஷன் அரிசி தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலமாகவும் ரயில்கள் மூலமாகவும் கடத்தபப்டுகிறது. தகவல் அறிந்து அவ்வப்போது அதிகாரிகள் அவற்றை பிடிப்பதும் அடிக்கடி நாம் செய்திகளில் பார்த்து வருகிறோம். குறிப்பாக அண்டை மாநிலங்களோடு எல்லையை பகிர்ந்து இருக்கும் மாவட்டங்களில் இவ்வாறு ரேஷன் அரிசி கடத்தப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.

ரேஷனில் இலவசமாக அரிசியை வாங்கி அதனை வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதும் தெரியவந்துள்ளது. சிலர் இந்த அரிசியை பாலிஸ் செய்து பிராண்டுகளின் பெயரில் போலியாக விற்பனை செய்வதாகவும் சொல்லப்படுகிறது. எனவே ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தீவிர பரிசோதனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி பகுதியில் வீட்டில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனை அடுத்து தூத்துக்குடியில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ரேஷன் அரிசியை விற்பனை செய்பவர்களின் குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ரேஷன் அரிசியை யாரும் வீட்டில் பதுக்கி வைக்க கூடாது ,கடத்தல் ஈடுபடும் நபர்களுக்கு அவற்றை விற்கக்கூடாது எனவும் அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதுமே ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் இது போன்ற செயல்களுக்கு மக்கள் துணை போனால் அவர்களின் ரேஷன் அட்டையே ரத்தாகும் சூழல் உண்டாகும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+