உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலை ஜனவரி 22 ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பிரான் பிரதிஷ்டை சடங்குகளுடன் ராமர் சிலை அந்தக் கோயிலில் நிறுவப்பட்டது.
கோலாகலமாக நடைபெற்ற இந்த திறப்பு விழாவை உலகெங்கிலும் இருந்து பார்த்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆனந்தப் பரசவத்தை அடைந்தனர்.
ராமர் கோயிலின் எழில்மிகு தோற்றத்துக்குக் காரணமாக பல அம்சங்கள் இருந்தாலும் அதை கட்டிய லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம் மிகுந்த பெருமையைப் பெற்றுள்ளது.

வரலாற்றில் முக்கிய இடத்தை படித்துள்ள இந்த புகழ்பெற்ற ராமர் கோயிலை வடிவமைத்து சிறப்பாக எல்அண்டுடி நிறுவனம் கட்டி முடித்தது.
எல் அண்டு டி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4,91,500 கோடி ஆகும். இதற்கு எஸ்என் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார்.
சிவில் இஞ்சினியரிங் மற்றும் எம்பிஏ பட்டதாரியான சுப்ரமணியனை எல் அண்டு டி நிறுவனம் 1984 ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்த்தது. அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுப்ரமணியன் இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு முதல் இந்த கன்ஸ்ட்ரக்ஷன் மெகா நிறுவனத்தின் சிஇஓவாக அவர் இருந்து வருகிறார்.
எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஏஎம் நாயக் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அதன் தலைவராக சுப்ரமணியன் பொறுப்பேற்றார். மல்டி மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தின் போர்டு ஆப் டைரக்டர்ஸின் உறுப்பினராகவும் சுப்ரமணியன் இருக்கிறார்.
இந்திய மல்டி மில்லியன் நிறுவனம் இஞ்சினியரிங், கன்ஸ்ட்ரக்ஷன், மேனுபாக்சரிங், டெக்னாலஜி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
சுப்ரமணியனின் சொந்த ஊர் சென்னை. அவரது புரபஷனல் வேலை எல் அண்டு டி நிறுவனத்தில் 1984 ஆம் ஆண்டு ஒரு புராஜக்ட் இஞ்சினியராகத் தொடங்கியது. சிவில் இஞ்சினியரிங் மற்றும் எம்பிஏ படித்துள்ளார். அத்துடன் லண்டன் பிஸினஸ் ஸ்கூலில் எக்ஸிகியூட்டிவ் மேனேஜ்மென்ட் புராகிராமையும் முடித்துள்ளார்.
மீனா என்பவரை சுப்ரமணியம் திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். LTIமைண்டுட்ரீ, எல் அண்டு டி டெக்னாலஜி சர்வீஸஸ் ஆகிய நிறுவனங்களின் துணைத் தலைவராக சுப்ரமணியன் பதவி வகிக்கிறார்.
மேலும் எல் அண்டு டி மெட்ரோ ரயில் லிமிடெட்டின் தலைவராகவும் உள்ளார். எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் இயக்குநர் மற்றும் தலைவராகவும் அவர் உள்ளார். 2022 நிதியாண்டில் அவரது வருடாந்திர சம்பளம் ரூ.61.27 கோடி ஆகும். இது தினமும் ரூ.16,70,000க்கு சமமாகும். இது கடந்த ஆண்டை விட 115 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு அவரது சம்பளத்தை கணிசமாகக் குறைத்துக் கொண்டார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications