சீனாவின் ஜிசிகாவோ (Zisiqiao) எனும் ஏழ்மை நிரம்பிய கிராமத்தில் யாங் ஹோசாங் (Yong Hochang) எனும் விவசாயிக்கு ஆர்த்ரைட்டிஸ் வந்துவிட்டது. 1970களில் நவீன சிகிச்சைக்கு வழியில்லை. பாரம்பரிய மருத்துவர் ஒருவர் "பாம்பு ஒயின் குடி' என அறிவுரை சொன்னார்.
இந்து ஒரு அறிவுரை மொத்த ஊரையும் பாம்பு வளர்க்க வைத்தது மட்டும் அல்லாமல் பாம்பின் விஷம் மருந்தாக பயன்படுத்தும் புது கலாச்சாரம் உருவானதிற்கு வித்திடப்பட்டு உள்ளது. இதுக்குறித்து நியான்டர் செல்வன் பதிவில் ஒரு எப்படி ஒரு ஏழ்மையான கிராமத்தின் முயற்சி சீன பார்மா துறையை தலைகீழாக மாற்றியுள்ளது என கூறியுள்ளார்.

ஆர்த்ரைட்டிஸுக்கு என உள்ள ஒரு வகை பாம்பை பிடித்து ஒயினில் சில முலிகைகைகளுடன் போட்டு விடுவார்கள். அதன் பின் சில நாட்கள் கழித்து மருந்து மாதிரி அதை குடித்து வரவேண்டும். ஒவ்வொரு வியாதிக்கும் இப்படி ஒரு பாம்பு ஒயின் சீனாவில் பிரபலம்.
தப்பான பாம்பு, விஷம் தப்பான அளவில் கலந்தால் மதுவே நம் உயிரை எடுத்துவிடும். இப்படி ஒரு ரொம்ப சிக்கலான மருந்து. சரியாக செய்தால் குணமாகாத வியாதியே இல்லை என சொல்லபடுகிறது. நிஜம் என்ன என கேட்க வேண்டாம், இதேபோல் இப்போது சீனாவில் இதை பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படுவது இல்லை.

சரி, நம்ம கதைநாயகன் யாங்குக்கு ஆத்ரைடிஸ் குணமானதும் அவரிடம் பலரும் மருந்து கேட்க, அவரும் பாம்பு ஒயின் தயாரித்து விற்று பிரபலமாகிவிட்டார். ஆர்த்ரைட்டிஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு பாம்பு ஒயின் தயாரித்து விற்றார். இதற்கு நடுவே மேற்கத்திய மருந்து கம்பனிகளும் வந்து சில வகை பாம்பு விஷங்களை கேட்டன.
அத்தனை பாம்புகளுக்கு எங்கே போக? பார்க்கும் வரை பார்த்துவிட்டு வீட்டில் பாம்பு பண்ணையே போட்டுவிட்டார். பாம்பு வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. ஒரு வகை பாம்பு இன்னொரு வகை பாம்புக்கு எதிரி. தனி, தனியாக பிரித்து வளர்க்க வேண்டும். பாம்புகள் குளிர் ரத்த பிராணிகள். கோடையில் அவற்றுக்கு தன்ணீர் தொட்டி வேண்டும். அதிக குளிரும் ஆகாது.

பாம்புகள் சீசனுக்கு தான் கலவி புரியும், முட்டையிடும். ஆண் பாம்பை பெண் பாம்புகள் கருத்தரிக்கும் சமயம் நெருங்க விடகூடாது. முட்டை போடும் முன் பெண் பாம்பின் வாயை தைத்துவிட வேண்டும். இல்லையெனில் பாதி முட்டைகளை அதுவே சாப்பிட்டுவிடும். ஆண்டுக்கு நாலைந்து மாதம் தூங்கும், இதை ஹைபர்னேஷன் (Hibernation) என்பார்கள். சத்தம் இல்லாமல், இருட்டாக வைத்திருக்கவேண்டும்.
அவை முழுக்க இறைச்சியை உண்பவை. பாம்புக்கு என ஸ்ப்ஷலாக சிக்கன், பன்றி இறைச்சியை சாஸேஜ் வடிவில் செய்து கொடுக்க வேண்டும். 90% பெண் பாம்புகளும், இனபெருக்கத்துக்கு 10% ஆண் பாம்புகளும் இருந்தால் போதும். சில பாம்புகளுக்கு மாதம் ஒரு முறை உணவு, சிலவ்ற்றுக்கு வாரம் ஒரு முறை உணவு கொடுக்கவேண்டும்.

பிசினஸ் சக்கைபோடு போட்டது, மேற்கத்திய மருந்து கம்பனிகள் நிறைய பாம்பு விஷத்தை வாங்குவார்கள். இந்த பாம்புகளும் விஷத்துக்காக தான் வளர்க்கபடுகின்றன, விஷம் வருவது நின்றவுடன் இறைச்சிக்கு கொல்லபடுவிடும். பாம்புதோல் ஐரோப்பாவுக்கு பர்ஸ், கைப்பை தயாரிக்க ஏற்றுமதியாகும். பாம்பு இறைச்சி சூப்பு தயாரிக்க உணவகங்களுக்கு விற்கப்படும். வேஸ்ட் ஆகும் பொருள் என எதுவும் பாம்பில் கிடையாதாம்.
சரக்கடிக்கு முன் பாம்பு ஈரலை சாப்பிட்டால் நமது ஈரலுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். பாம்பின் பித்தப்பை ஆஸ்துமாவுக்கு மருந்தாம். பாம்பு ஒயின் கதை தனி. இப்படி பாம்பின் ஒவ்விரு உள்ளுறுப்புக்கும் ஒவ்வொரு நம்பிக்கை, ஒவ்வொரு மருத்துவ பலன்.
இவர் ஒரே பாட்டில் கோடிஸ்வரர் ஆக, இவரை பார்த்து ஒட்டுமொத்த கிராமமும் பாம்புகளை வயலிலும், விட்டிலும் வளர்த்து வருகின்றது. எல்லாம் விஷபாம்புகள் தான். 9000 டன் பாம்புகள் ஆண்டு ஒன்றுக்கு ஏற்றுமதி ஆகின்றன.


Click it and Unblock the Notifications