சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் கொரோனா காலத்தில் ஊழியர்கள், பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்தன.
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்களும், படி படியாக அலுவலகத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்து வருகின்றன. பல நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலை பின்பற்ற தொடங்கியுள்ளன.
இதற்கிடையில் ஸ்னாப் இன்க் நிறுவனம் 80% ஊழியர்களின் தேவை உள்ளது. அவர்கள் பிப்ரவரி இறுதிக்குள் அலுவலகம் வரப்வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
வீட்டில் இருந்தே பணி
பல மாதங்களாக வீட்டில் இருந்தோ அல்லது ரீமோட் ஒர்க் மூலம் தூரத்தில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்கள், அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்குள் 80/20 என்ற விகிதத்தில் ஹைபிரிட் மாடல் பணிக்கு திரும்புவதில் அடுத்த ஆண்டு அனைவரையும் ஒன்றிணைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாரத்தில் 4 நாள் பணி
ப்ளூம்பெர்க் நியூஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்த அறிக்கையில், ஸ்னாப் சாட்டில் பிப்ரவரியில் தொடங்கி, வாரத்தில் 4 நாட்கள் அலுவலகத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பாதிக்கத் தொடங்கிய நிலையில் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்த நிறுவனங்களில் ஒன்றாகும்.
உபெரின் கருத்து
கடந்த வாரம் வாடகை வாகன சேவை நிறுவனமான உபெர் தனது ஊழியர்களை வாரத்திற்கு, வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஸ்னாப் சாட் நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊழியர்களில் பணி நீக்கம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியது.
பொருளாதார மந்தம்
நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் சீரழிந்து வரும் பொருளாதாரத்தின் மத்தியில், செலவுகளைக் குறைக்கும் திட்டங்களை மூடுவதாகவும் கூறியது. சில பகுதிகளில் செலவுகளை குறைத்துள்ள நிலையிலும், ஸ்னாப்பின் தலைமை செயல் அதிகாரி அறிக்கையில், எங்கள் குறைந்த வருவாய் வளர்ச்சியின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும். சந்தை சூழலுக்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications