இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான விப்ரோ தனது மார்ஜின் அளவை மேம்படுத்திக்கொள்ள வெளிநாட்டில் இருக்கும் தனது ஊழியர்களில் மிட் லெவல் அதிகாரிகளைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்து இதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இதை தொடர்ந்து எப்படா மத்த ஐடி நிறுவனமெல்லாம் பணிநீக்கம் செய்யப்போகுதுன்னு தெரியல என ஐடி ஊழியர்கள் புலம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் டிசிஎஸ் புதிய குண்டை தூக்கிப்போட்டது. டிசிஎஸ் நிறுவனத்தின் வொர்க் ப்ரம் ஹோம் அறிவிப்பை ஏற்று எத்தனை ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகிறார்களோ அதை பொருத்துப் பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேரியபிள் பே-க்கான ரேட்டிங்-ஐ இணைத்துள்ளது.

இப்படிப் பல நிறுவனங்கள் பல வகையில் செலவுகளைக் குறைக்கவும், லாபத்தை அதிகரிக்கவும், ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் பொருட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் படலம் 2024 ஆம் ஆண்டிலும் தொடர் கதையாகியுள்ளது.
இந்த நிலையில் சமூகவலைத்தள துறையில் 2K கிடஸ்-ன் பிடித்தமான தளமாக இருக்கும் ஸ்னாப்சாட் சேவையின் தாய் நிறுவனமான SNAP INC சுமார் 10 சதவீத ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
SNAP INC 2022 ஆம் ஆண்டுச் சுமார் 20 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து பெரும் பாதிப்பையும், தாக்கத்தையும் எதிர்கொண்டது. இதன் பின்பு தற்போது 10 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.
மொபைல் போன் தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் நோக்கியா நிறுவனத்தில் 11000 முதல் 14000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டு இருந்த வேளையில், இதன் இந்திய தலைமை அதிகாரியான சஞ்சய் மாலிக் ராஜினாமா செய்துள்ளார். இவரின் இடத்தில் தற்போது தருண் சாப்ரா வந்துள்ளார், இவரின் தலைமையில் இனி பணிநீக்கங்கள் தொடரும்.
சர்வதேச பேமெண்ட்-ன் முடிசூடா மன்னனாக விளங்கும் பேபால் நிறுவனத்தில் 2500 பேர் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பேபால் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத ஊழியர்கள் பணிநீக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரபல பார்சல் சேவை நிறுவனமான UPS சுமார் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இப்படி உலகம் முழுவதும் இருக்கும் பிரபல நிறுவனங்கள் அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications