இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக விளங்கும் ஸ்னாப்டீல் போட்டி மிகுந்த இந்திய சந்தையில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தனது வர்த்தக விரிவாக்கத்திற்காகவும், வளர்ச்சி திட்டத்திற்காகவும் முதலீட்டை திரட்டும் வகையில் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு உள்ளது.
பேடிஎம் நிறுவனத்தைப் போலவே ஸ்னாப்டீல் நிறுவனமும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் மற்றும் சீனாவின் அலிபாபா குரூப் முதலீட்டில் இயங்கி வருகிறது.
ஸ்னாப்டீல் நிறுவனம்
ஸ்னாப்டீல் நிறுவனம் ஐபிஓ வெளியிடுவதற்காகப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் DRHP விண்ணப்பம் சமர்ப்பிக்க உள்ளதாகவும், மார்ச் மாதம் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. செபி-யின் ஒப்புதலுக்குப் பின்பு தான் ஐபிஓ வெளியிட முடியும்.
1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டு
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஈகாமர்ஸ் சந்தையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களின் சக போட்டி நிறுவனமாகத் திகழும் ஸ்னாப்டீல் 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டு உடன் 200 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஐபிஓ வாயிலாகத் திரட்ட முடிவு செய்துள்ளது.
அமேசான் மற்றும் பிளிப்கார்ட்
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பெரு நகரங்களில் பெரிய அளவில் ஆதிக்கம் செய்து வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில் ஸ்னாப்டீல் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகப்படியான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது ஸ்னாப்டீல்.
முதலீட்டாளர்கள்
ஸ்னாப்டீல் நிறுவனத்தில் சாப்ட்பேங்க், அலிபாபா குரூப் மட்டும் அல்லாமல் பிளாக்ராக், டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், ஈபே போன்ற பல முன்னணி நிறுவனங்கள் முதலீடு செய்து பங்குகளை வைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல் படி பிளாக்ராக், டெமாசெக் ஹோல்டிங்க்ஸ், ஈபே ஆகிய 3 முக்கிய முதலீட்டாளர்களும் ஸ்னாப்டீல் ஐபிஓ-வில் பங்குகளை விற்பனை செய்யவில்லை.
பேடிஎம்
பேடிஎம் நிறுவனத்தின் ஐபிஓ தோல்விக்குப் பின்பு டெக் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடுவதிலிருந்து பின்வாங்கியுள்ளது. இந்நிலையில் ஸ்னாப்டீல் நிறுவனம் 2.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 400 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுத் தற்போது 1.5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 200 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications