எலான் மஸ்கிற்கு சொந்தமான சமூக ஊடக நிறுவனமான எக்ஸின் மதிப்பு மீண்டும் 44 பில்லியன் டாலர்கள் என்ற நிலைக்கு வந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எலான் மஸ்க் சமூக ஊடகத் தளமான டிவிட்டரை கைப்பற்றி தனக்கு சொந்தம் ஆக்கினார். அதன் பிறகு அதற்கு எக்ஸ் என பெயர் மாற்றம் செய்தார்.
எலான் மஸ்க் கைபற்றியதை அடுத்து எக்ஸ் நிறுவனத்தின் மதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதன் மதிப்பு 44 பில்லியன் டாலர்கள் என்ற அளவை எட்டி இருக்கிறது. எக்ஸ் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு எலான் மஸ்க் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளும் ,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான அவருடைய நெருக்கமும் காரணமாக சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் முதலீட்டாளர்கள் சிலர் ஏற்கனவே தங்கள் வசம் இருக்கும் எக்ஸ் நிறுவன பங்குகளை பரிமாற்றம் செய்து கொண்டதாகவும் இதுவே நிறுவனத்தின் பங்கு மதிப்பு பழைய நிலைக்கு வந்ததற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய போது அதன் மதிப்பு 44 பில்லியன் டாலராக இருந்தது. அதன் பிறகு குறைந்தது. தற்போது மீண்டும் 44 பில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை எட்டி உள்ளது.
எலான் மஸ்க் நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு அதன் வருமானம் குறைந்ததாக சொல்லப்பட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பிருந்த வருமான நிலைக்கு வந்துவிட்டதாம். அதாவது எக்ஸ் நிறுவனத்தின் வருமானம் 1.2 பில்லியன் டாலர்கள் என்ற அளவை மீண்டும் எட்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலீட்டாளர்கள் பலரும் எக்ஸ் நிறுவனம் மீது நம்பிக்கை அதிகரித்து இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக எலாம் மஸ்க் எக்ஸ் நிறுவன முதலீட்டாளர்களுக்கு தான் தொடங்கிய செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனமான எக்ஸ் ஏஐ-யின் 25 சதவீத பங்குகளை வழங்கியிருக்கிறார். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு எலான் மஸ்க் மீதும் மீண்டும் நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தெரிகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் மஸ்கிற்கு நெருக்கமானவரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது மற்றும் டிரம்ப் நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது உள்ளிட்டவையும் எக்ஸ் நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் கூடுதலாக முதலீடு செய்ய காரணம் ஆகும்.
இது ஒருபுறம் இருந்தாலும் எக்ஸ் நிறுவனம் விளம்பரங்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. எக்ஸ்மணி என்ற ஒரு டிஜிட்டல் வாலட்டை கொண்டுவரதிலும் தீவிரமாக இருக்கிறது. அண்மையில் தான் எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் அவர் இணைத்தார், பிரீமியம் முறையில் சப்ஸ்கிரைப் செய்த பயனர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications