ராணுவத்திற்காக நிதி திரட்டுகிறதா மத்திய அரசு? – வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் உண்மையா? - #factcheck

இந்தியாவில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன . மோசடியாளர்கள் புதுப்புது யுக்திகளை கையாண்டு மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தை பறிக்கின்றனர். நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிரபலங்கள் பெயரில் போலிக்கணக்கை தொடங்கி இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் , வாட்ஸ் அப் வாயிலாக பணம் கேட்பது என மோசடியாளர்கள் நாள்தோறும் புதிய யோசனையுடன் மக்களை ஏமாற்றுவதற்கு திட்டம் தீட்டுகின்றனர் .

அந்த வகையில் தற்போது ராணுவத்தின் பெயரை பயன்படுத்தி போலியான தகவலை பரப்பி ஒரு கும்பல் பணம் பறிப்பது தெரிய வந்திருக்கிறது வாட்ஸப் மற்றும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய செயலிகளில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்கான நிதியம் என்ற பெயரில் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ராணுவத்திற்கு நவீன ஆயுதங்களை வாங்க வேண்டும் அதற்கு அரசு நிதி திரட்டுவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

ராணுவத்திற்காக நிதி திரட்டுகிறதா மத்திய அரசு? – வாட்ஸ் அப்பில் பரவும் தகவல் உண்மையா? - #factcheck

அதில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்காக மற்றும் போரில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காகவும் பிரத்தியேக நிதியம் உருவாக்கப்பட்டு அதற்கென தனிப்பட்ட வங்கி கணக்கு உருவாக்கப்பட்டிருப்பதாக என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதில் ஒரு வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி ஒவ்வொரு இந்தியரும் தங்களால் இயன்ற தொகையை இந்த கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அனுப்பலாம் இந்த தொகையை அரசு பெற்று ராணுவத்தை நவீனப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பல்வேறு சமூக வலைத்தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு அலுவலகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் இது தவறான தகவல் என தெரிவித்துள்ளது. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவோ ஆயுதங்கள் வாங்க உதவி பெறுவதற்காகவோ அரசு எந்த ஒரு வங்கிக் கணக்கையும் உருவாக்கவில்லை என தெரிவித்திருக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த போலியான தகவல்களை கண்டு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு இதுபோல எந்த ஒரு வங்கி கணக்கையும் தொடங்கவில்லை என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் குடிமக்கள் இதுபோன்ற போலியான தகவல்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய வங்கி கணக்குகளுக்கு ஒருபோதும் பணத்தை அனுப்பக்கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது, எந்த ஒரு தகவலையும் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னரே மற்றவருக்கு பகிர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+