சென்னை: ஜப்பான் நாட்டின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான Softbank இன் முதலீட்டு நிறுவனமான Softbank Vision Fund, இந்தியாவின் பிரபல பேமெண்ட் மற்றும் நிதியியல் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனத்திலிருந்து ஜூன் காலாண்டில் சுமார் 150 மில்லியன் டாலர் இழப்புடன் இந்நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறியுள்ளது.
2017 ஆம் ஆண்டில், பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் பல கட்டங்களாக Softbank சுமார் 1.5 பில்லியன் டாலர் முதலீடு செய்து பெரும் பங்குகளைக் கைப்பற்றி முக்கிய பங்குதாரராக இருந்தது. இந்த முதலீட்டை பேடிஎம் ஐபிஓ வெளியிட்ட போதே திரும்ப எடுக்க முடிவு செய்த நிலையில் ஏமாற்றம் அடைந்தது.

இதை தொடர்ந்து நல்ல விலைக்கு பங்குகள் உயரும் போது போட்ட காசையாவது திரும்ப எடுக்க வேண்டும் என காத்திருந்த நிலையில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்த நிலையில் காத்திருந்தது போதும் என முடிவு செய்த Softbank Vision Fund 150 மில்லியன் டாலர் நஷ்டத்தில் அனைத்து பங்குகளையும் விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளது. இதன் மூலம் Softbank நிறுவனம் பேடிஎம் நிறுவனத்திலிருந்து 10-12 சதவீத இழப்புடன் வெளியேறியுள்ளது.
2021 ஆம் ஆண்டில் பேடிஎம் நிறுவனத்தின் IPO முன்னதாக, Softbank நிறுவனம் பேடிஎம் நிறுவனத்தில் சுமார் 18.5 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதில், SVF இந்தியா ஹோல்டிங்ஸ் (கேமன்) லிமிடெட் மூலம் 17.3 சதவீத பங்குகளையும், SVF பான்தர் (கேமன்) லிமிடெட் மூலம் 1.2 சதவீத பங்குகளையும் வைத்திருந்தது.
பேடிஎம் பங்கு வெளியீட்டின் போது, SVF பான்தர் தனது முழு பங்குகளையும் ரூ.1,689 கோடிக்கு (சுமார் 225 மில்லியன் டாலர்) விற்றுவிட்டது. இந்த நிலையில் பேடிஎம் ஏற்கனவே ஐபிஓ வெளியீட்டிலிருந்து 24 மாதங்களில் வெளியேறுவோம் என்று Softbank அறிவித்திருந்தது. இந்த வெளியேற்றம் Softbank-ன் திட்டப்பட்டது என்றாலும், இழப்பை எதிர்பார்த்திருக்கவில்லை.
Softbank Vision Fund வங்கிய பேடிஎம் பங்குகள் சுமார் ரூ.800 என்ற சராசரி விலையில் வாங்கியது. ஆனால் பேடிஎம்-ன் IPO விலையான ரூ.2,150 ஐ இதுவரை எட்டவில்லை. தற்போதைய பங்கு விலை ரூ.1,955 ஆக இருந்தாலும், இது பங்கு வெளியீட்டு விலையைக் காட்டிலும் 9 சதவீதம் குறைவு.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications