இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றான ஜப்பான் சாப்ட்பேங்க், கடந்த சில வருடத்தில் சில நிறுவன முதலீட்டில் அதீத நஷ்டத்தை அடைந்த காரணத்தால் பெரிய அளவிலான முதலீடுகளை செய்யாமல் அமைதி காத்தது.
இந்நிலையில் தற்போது மீண்டும் களத்தில் இறங்க முடிவு செய்துள்ளது. அதுவும் இந்தியாவில் மிகப்பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் இந்நிறுவனத்தின் தலைவரான ராஜீவ் மிஸ்ரா.
சாப்ட்பேங்க் குரூப்
இந்தியாவில் சரியான மதிப்பீட்டு உடன் இருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்ய வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் அடுத்த ஒரு வருடத்தில் அதாவது 2022ஆம் ஆண்டுக்குள் 5 முதல் 10 பில்லியன் டாலர் வரையிலான தொகையை சாப்ட்பேங்க் குரூப் முதலீடு செய்யத் தயாராக உள்ளது என சாப்ட்பேங்க் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ்-ன் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நிர்வாகம்
இந்தியாவில் எங்களுடைய முதலீடுகள் ஜப்பான் நிர்வாகத்தை எந்த வகையிலும் மனமுடைய செய்தது இல்லை, இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் நாங்கள் செய்த முதலீடுகளின் மதிப்பீடு இன்று உச்சத்தைத் தொட்டு உள்ளது எனவும் ராஜீவ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
வென்சர் கேப்பிடல்
சீனா முதலீடுகள் மூலம் சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், பல துறை முதலீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மொத்த வென்சர் கேப்பிடல் மற்றும் ஏஞ்சல் முதலீடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.
2021 முதலீட்டு அளவு
2021ல் சாப்ட்பேங்க் இந்தியாவில் வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ள நிலையில், 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் முதலீட்டு அளவுகளை 10 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது ராஜீவ் மிஸ்ரா மூலம் தெரியவந்துள்ளது.
7.2 பில்லியன் டாலர் நஷ்டம்
செப்டம்பர் காலாண்டில் ஜப்பான் சாப்ட்பேங்க் நிறுவனத்தின் விஷன் பண்ட் சுமார் 7.2 பில்லியன் டாலர் அளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்த நஷ்ட அளவீட்டுக்கு மிக முக்கிய காரணம் தென் கொரியாவின் ஈகாமர்ஸ் நிறுவனமான Coupang Inc மற்றும் சீனாவின் DIDI நிறுவனம்.
இந்திய முதலீடுகள்
ஜப்பான் சாப்ட்பேங்க் இந்திய ஸ்டார்அப் சந்தையில் முதலீடு செய்த துவகத்தில் ஓலா மற்றும் பிளிப்கார்ட் ஆகிய நிறுவனத்தில் முதலீடு செய்யத்து. இதன் பின்பு பேடிஎம், ஓயோ என பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications