மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர்-ஐ தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐடி நிறுவனம், தனது ஊழியர்கள் ஷிஃப்ட் முடிந்த பின்பும், தொடர்ந்து வேலை செய்வதை தடுக்க அவர்களின் சிஸ்டம்களை தானாக ஷட்-டவுன் செய்து வருகிறது.
இது பற்றி அந்நிறுவன ஊழியரான தான்வி கந்தல்வால் லின்கிடுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஷிஃப்ட் நேரம் முடிந்தது
இவரது பதிவில் நிறுவன கணினியில், "எச்சரிக்கை!!! ஷிஃப்ட் நேரம் முடிந்தது. உங்களின் சிஸ்டம் பத்து நிமிடங்களில் ஷட்-டவுன் ஆகி விடும். தயவு செய்து வீட்டுக்கு கிளம்புங்கள்," எனும் தகவல் இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை இணைத்து இருக்கிறார். இந்த பதிவு தான் தற்போது இந்தியா முழுவதும் வைரலாகியுள்ளது.
டிரென்டிங் பதிவு
சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் லின்க்டுஇன் பதிவுக்கு ஏராளமானோர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பலர் இந்த ஐடி நிறுவனத்தின் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பணி சூழல்
ஒருத்தர், "நான் இதே போன்ற பணி சூழல் ஒவ்வொரு நிறுவனத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என விரும்புகிறேன்.... ஊழியர்களின் ஆரோக்கியம், உடல்நலன் மற்றும் மகிழ்ச்சி உள்ளிட்ட குறித்து ஏராளமான சமூக விழிப்புணர்வு குறிப்புகள் வெளியாகும் போதிலும், இவை அனைத்தும் காகிதத்திலேயே உள்ளது. ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எதுவும் செயல்பாட்டில் இல்லை..
மன உளைச்சல்
ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் மன உளைச்சலுக்கு ஆளிகின்றனர். இது அவர்களின் உடல்நலத்தை பாதிப்பதோடு, ஏராளமான மன நல பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதன் மூலம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது... மன உளைச்சல் இல்லாத, மகிழ்ச்சிகர பணி சூழல் குறித்து நிறுவனங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க வேண்டியது ஆகும்." என குறிப்பிட்டுள்ளார்.
கூடுதல் நேரம்
மற்றொரு லின்கிடுஇன் யூசர், "அருமையான விஷயம்... இது ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்க வேண்டியது... பணியில் கூடுதல் நேரம் இருப்பது ஒழுக்கமற்ற பணி சூழலை உருவாக்கி, எங்களின் பணியை பாதிக்க செய்கிறது.... ஆனால், நிறுவனங்கள் தரப்பில் இது பற்றி யாரும் நினைப்பதே இல்லை, அவர்கள் கூடுதல் நேரம் கொடுத்தால், அதிக வேலை முடியும் என்றே நினைக்கின்றனர். ஆஆனால் இது உண்மையில்லை...." என கமெண்ட் செய்து இருக்கிறார்.
சர்ச்சை
ஆதரவு கருத்துகள் குவிந்த போதிலும், பலர் இதனை சர்ச்சையாக்கி, "இது நல்ல எடுத்துக்காட்டு இல்லை. இது மக்களின் பணியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்திவிடும்! வேலை முடியும் தருவாயில் இன்றே அதனை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கும் போது இறுதியில் இவ்வாறு நடந்தால், அனைத்துமே பாழாகி விடும்..
மக்கள் மீது தினிக்கக்கூடாது
மேலும் இதே விஷயத்தை மறுநாள் செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தை எதிர்மரையாக தூண்டும். பணி சூழல் மற்றும் வாழ்க்கை இடையேயான உறவை பின்பற்றுவதை மக்கள் மீது தினிக்கக்கூடாது, மாறாக மக்கள் சிறப்பான பணி மற்றும் வாழ்க்கையை நடத்த தங்களின் மன நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்," எனவும் சிலர் தெரிவித்து இருக்கிறார்.
தான்வி கந்தல்வால் பதிவு
சாஃப்ட்-க்ரிட் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் மனிதவள பிரிவில் பணியாற்றி வரும் தான்வி கந்தல்வால் தனது லின்கிடுஇன் பதிவில் ஹைலைட் விஷயம் அதற்கு அவர் கொடுத்த தலைப்பு தான் எனலாம். "இது விளம்பர நோக்கத்திலோ அல்லது கற்பனையான பதிவோ இல்லை! இது தான் எங்கள் நிறுவனத்தின் நிலை!!
Work Life Balance முக்கியமா
'சாஃப்ட்-க்ரிட் கம்ப்யுட்டர்ஸ்' எங்கள் நிறுவனம் ஊழியரின் #WorkLifeBalance-க்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்கிறது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நிர்வாகம் அனைத்து ஊழியர்களின் கம்பியூட்டரிலும் இந்த விசேஷ ரிமைண்டரை வெளியிடுகின்றனர். எங்களது கணினி ஷிஃப்ட் நேரம் முடிந்து விட்டதாக கூறி சிஸ்டத்தை லாக் செய்து விடுகிறது.
CALL, MAIL வராது
பணி நேரத்திற்கு பின் அழைப்புகளோ அல்லது மின்னஞ்சல்களோ வராது!! இது அருமையாக உள்ளதா? இது போன்ற கலாசார சூழலில் பணியாற்றும் போது உங்களுக்கு Monday Motivation அல்லது Fun Friday உள்ளிட்ட எதுவும் மனதை மகிழ்விக்க வேண்டிய அவசியம் இல்லை.
மகிழ்ச்சியான சூழல்
மேலும் இது தான் எங்கள் அலுவலகத்தின் உண்மை நிலை! ஆம், நாங்கள் Flexible பணி நேரம், மகிழ்ச்சியான சூழல் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நீங்களும் எங்களுடன் இணையலாம், " என்று பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications