திடீரென பணி நீக்கம், எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்கவில்லை, செலவுக்கு பணமில்லை வாழ்க்கையில் இந்த பிரச்னைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வந்துவிடக் கூடாது, அப்படி வந்தாலும் நாம் துவண்டு போக கூடாது. ஆனால் போராடும் குணம் இருந்தால் எந்த ஒரு பிரச்சனையையும் சமாளித்துவிட்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியும் என்பதற்கு உதாரணமான ஒரு நபரின் கதை தான்.
ரியாசுதீன் சாப்ட்வேர் டெவலப்பர் முதல் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் வரை இவரது வாழ்க்கை பலருக்கும் முன் உதாரணமாக அமைந்திருக்கிறது. ரியாசுதீன் தன்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட கடினமான சூழல்களை எப்படி கடந்து வந்தேன் என்பது குறித்து லிங்குடின் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பராக பணிபுரிந்து வந்த ரியாசுதீன் சில மாதங்களுக்கு முன்பு திடீரென பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த எதிர்பாராத நிகழ்வு தன்னுடைய வாழ்க்கையை புரட்டி போட்டதாக பதிவு செய்துள்ளார்.
"பல இடங்களில் வேலை தேடி எனக்கு வேலை கிடைக்கவில்லை. என்னுடைய நிதி நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அந்த நேரத்தில்தான் என்னுடைய நிதி நிலைமையை சீராக வைத்துக் கொள்வதற்காக நான் ஸ்விக்கியில் டெலிவரி பார்ட்னராக வேலைக்கு சேர்ந்தேன்" என கூறியுள்ளார்.
திக்கு தெரியாத ஒரு காட்டில் அலைந்து திரிந்த எனக்கு ஒரு பாதையை ஏற்படுத்தி தந்தது ஸ்விக்கி தான் என கூறியுள்ளார். அதிகாலையில் சென்று பொருட்களை டெலிவரி செய்வது, மழை, வெயில் என பாராமல் வேலை செய்தது ஆகிய அனைத்தும் பல்வேறு வாழ்க்கை பாடங்களை கற்றுத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இருந்த வேலையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது , புதிதாக வேலை தேடிய இடங்களில் பலர் தன்னை நிராகரித்தது, இப்படி எதிர்மறையாக இருந்த தன்னுடைய வாழ்க்கை ஸ்விக்கியில் வேலைக்கு சேர்ந்த பிறகு நேர்மறையாக மாறியது என கூறியுள்ளார்.
பொறுமை, அமைதி உள்ளிட்ட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கடந்த சில மாதங்களில் நான் கற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார். தான் டெலிவரி செய்த ஒவ்வொரு ஆர்டரும் தன்னை மனரீதியாகவும் வலுப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
"தற்போது எனக்கு வேறு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. ஸ்விக்கி வேலையை கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்னுடைய கடினமான காலத்தில் எனக்கு மிக துணையாக இருந்த இந்த வேலையை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். ஒவ்வொருவருக்கும் நான் கூறிக் கொள்வது இதுதான் நீங்கள் மட்டும் அல்ல உங்களை போல என்னை போல பலரும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் இருக்கிறோம்.
ஆனால் திடீரென வாழ்க்கை உங்களுக்கு ஒரு வாய்ப்பினை கொடுக்கும் அந்த வாய்ப்பு உங்களை இன்னும் வளர்ச்சி அடைய செய்து நீங்கள் எதிர்பார்க்காத ஒரு நபராக உங்களை மாற்றும்" என அவர் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
அவருடைய இந்த பதிவுக்கு லிங்குடின் தளத்தில் பலரும் பின்னூட்டங்களை பதிவு செய்துள்ளனர்.
உங்களுடைய கதை பலருக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது என ஒரு பயனாளர் கூறியுள்ளார். இது போன்ற கடினமான சூழ்நிலைகள் தான் நம்மை இன்னும் வலுவானவர்களாக மாற்றும் என ஒரு பயனாளர் தெரிவித்துள்ளார்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications