தொழில்நுட்ப வளர்ச்சியானது அதிகரிக்க அதிகரிக்க சைபர் கிரைம் பிரச்சனைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தகவல் திருட்டின் மூலம் பணமோசடி, கார்டு குளோனிங் என் பல வடிவங்களில் இந்த திருட்டானது அதிகரித்துள்ளது.
இது கணினி மற்றும் மொபைல் போன், இணையம் மூலமாகவும் இந்த மோசடிகள் அரங்கேறி வருகின்றது.
உதாரணத்திற்கு ஆன்லைனில் ஏதேனும் பொருட்கள் வாங்கினால், சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது உங்கள் எஸ் எம் எஸ் அனுப்புவது, மெயில் அனுப்புவது மூலம் மோசடி நடக்க வாய்ப்புகள் அதிகம்.
நூதன முறையில் மோசடி
ஆன்லைனில் பஸ் டிக்கெட் முன்பதிவு செய்த ஐடி ஊழியரிடம் நூதன முறையில் 2 2 லட்சம் ரூபாயினை மோசடியாக அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மகராஷ்டிரா மாநிலம் தானேவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர், ஆன்லைனில் கேப் ஒன்றை ஆன்லைனில் முன்பதிவு செய்தார். இவரிடம் இருந்து தான் ஐடி ஊழியரிடம் நூதன முறையில் 2.2 லட்சம் ரூபாய் அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேப் முன்பதிவு
தானே நவுபாடா பகுதியை சேர்ந்த 36 வயது ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவர் சம்பவத்தன்று நாசிக் மாவட்டத்திற்கு செல்ல டிராவல் ஏஜென்சி இணையதளத்தில் கேப் ஒன்றை டிக்கெட்டை முன்பதிவு செய்ய முயன்றுள்ளார். இதற்காக அந்த டிராவல் ஏஜென்சியின் மின்னஞ்சல் முகவரிக்கு தனது விவரங்களை அனுப்பி வைத்துள்ளார்.
பயணத்திற்கு பிறகு செலுத்தலாம்
மேலும் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு இருந்த ஒரு தொலைபேசி எண்ணிலும் தகவலை பகிர்ந்துகொண்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அவருக்கு போன் அழைப்பு ஒன்று வந்தது.
இதில் எதிர் முனையில் பேசியவர் தான் டிராவல்ஸ் ஏஜென்சியில் இருந்து பேசுவதாக கூறியதுடன், குறிப்பிட்ட ஏஜென்சியின் இணையதளத்தில் உடனடியாக 100 ரூபாய் செலுத்தவும், பயணத்திற்கு பிறகு மீதமுள்ள தொகையை செலுத்தவும் தெரிவித்துள்ளார்.
பணம் மோசடி
இதையடுத்து ஐடி ஊழியர் பலமுறை அந்த இணைய தளத்தில் பணம் செலுத்த முயன்றும் அது முடியாமல் போனது. சில நிமிடங்கள் கழித்து அவரது செல்போன் எண்ணிற்கு அவரது வங்கி கணக்கில் இருந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தி 81,400 ரூபாயும், 71,085 ரூபாயும் மற்றும் 1.42 லட்சம் ரூபாய் அவரது கிரெடிட் கார்டில் இருந்து டெபிட் ஆகியுள்ளது.
ஏமாந்தது எப்படி?
இந்த மோசடி குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஏமாந்தது எப்படி?
வாடிக்கையாளர்கள் இணையதளம் அல்லது கணினியின் டொமைன் நேம் சிஸ்டம் (DNS) மூலம் சர்வரை கையாள்வதால், பயனர்கள் சரியான URL-ஐ டைப் செய்தாலும், பயனர்களை நேரடியாக போலி அல்லது தீங்கிழைக்கும் இணையதளத்திற்கு திருப்பிவிடுவார்கள். ஆனால் இதனை நீங்கள் உணர முடியாது.
எப்படி தடுப்பது?
இதுபோன்ற சைபர் கிரைம் தாக்குதல்களில் இருந்து உங்களை பாதுகாக்க உங்களது கணினி மென்பொருளை புதுபித்த நிலையில் வைத்திருப்பது அவசியம். இதுபோன்ற மோசடிகளில் இருந்து உங்களது கணினிகளை பாதுகாப்பதற்கு சரியான பாதுகாப்பு அம்சங்களை பயன்ன்படுத்த வேண்டும்.
மேலும் உங்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், இதுபோன்ற லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்கலாம். இது உங்களை மோசடியில் இருந்து பாதுகாக்கலாம்
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications