ஆக்ராவில் சம்ஷாபாத்தை சேர்ந்தவர் ராகேஷ் ஆர்யா. இவரது மகன்கள் ரிஷப் குப்தா, ஆயுஷ். கம்ப்யூட்டர் இன்ஜினியரான ரிஷப் குப்தா துபாயில் வேலை பார்த்து வந்தார். கோவிட் தொற்று ஏற்பட்டபோது அந்த வேலையை விட்டு விட்டு சொந்த ஊரான ஆக்ராவுக்குத் திரும்பினார்.
விவசாயத்தில் அவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தில் வீட்டிலேயே காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டார். அவருடன் ரிஷப் குப்தாவின் சகோதரர் ஆயுஷம் இந்தத் தொழிலில் சேர்ந்து கொண்டார். இப்போது தினமும் 1600 கிலோ காளானை அவர்கள் உற்பத்தி செய்கின்றனர்.

இதன் மூலம் அவர்கள் ஆண்டுக்கு 7.5 கோடி வருவாய் பார்க்கின்றனர். 27 வயதான ரிஷப் குப்தா இது பற்றி கூறுகையில் துபாயில் பார்த்த வேலையை விட்டுத் திரும்பிய பின்னர் மீண்டும் அங்கு செல்ல விரும்பவி்லலை. சொந்த ஊரில் ஏதாவது விவசாயம் பார்க்க விரும்பினேன். எங்கள் குடும்பத்துக்கு சம்ஷாபாத்தில் 3 ஏக்கர் நிலம் உள்ளது.
லண்டனில் பிபிஏ படித்துக் கொண்டிருந்த எனது தம்பி ஆயுஷ் குப்தாவும் படிப்பை முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பி விட்டார்.
இருவரும் சேர்ந்து எங்கள் நிலத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெள்ளரி போன்ற காய்கறிகளை சாகுபடி செய்தோம். பின்னர் காளான் வளர்ப்பில் ஈடுபட்டோம்.
காய்கறி விவசாயத்துக்காக மத்திய வேளாண்துறை அங்கீகரித்த இந்தோ இஸ்ரேல் திட்டமான கரவுண்டா பயிற்சியை பெற்றோம்.
அதன் பின்னர் 2021 ஜனவரியில் ஒரு பாலிஹவுஸை அமைத்து அதில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டோம்.
எங்கள் நிலத்தில் ஆங்கில வெள்ளரி ரகத்தை பயிரிட்டோம். 2021 மார்ச்சில் அறுவடை செய்தோம். கிலோ ரூ.40 முதல் ரூ.45க்கு விற்றோம். ஆனால் ஆண்டுமுழுவதும் விவசாயத்தில் சம்பாதிக்கும் அளவுக்கு தொழில் செய்ய நினைத்தோம் என்றார்.
இதைத் தொடர்ந்து சகோதரர்கள் இருவரும் பட்டன், ஆய்ஸ்டர், ஷிடேக்கே ரக காளான்களை குளிர் சேம்பர்களில் வளர்க்கத் தொடங்கினர்.
இந்தியாவில் இன்னும் குளிர் சேம்பர்களில் காளான் வளர்க்கும் முறை பிரபலமாகவில்லை. இந்த முறையில் ஆண்டுதோறும் கட்டுப்படுத்தப்பட்ட சீதோஷ்ணநிலையில் காளானை வளர்க்கலாம்.
2021 செப்டம்பரில் இயற்கை மண் உரம் வாங்கி காளான்களை நட்டனர். காளான் நன்றாக வளர்ந்தது. இதைத் தொடர்ந்து பட்டன் காளான்களை பெரிய அளவில் அவர்கள் சாகுபடி செய்யத் தொடங்கினர்.
ஒரு ஏக்கரில் குளிர் சேம்பர், இயற்கை உர ஆலை, பேக்கேஜிங் யூனிட்டை அமைத்தனர். இன்றைக்கு ரிஷப்பும் ஆயுஷம் சேர்ந்து தினமும் 1600 கிலோ காளான்களை உற்பத்தி செய்கின்றனர். இதில் 1300 கிலோ ஏ கிரேடு காளான்கள். கோடைக்காலத்தில் காளான்களை 1 கிலோ ரூ.180க்கும் குளிர்காலத்தில் ரூ.90க்கும் விற்கின்றனர். அவர்களது தினசரி வருமானம் ரூ.2.15 லட்சம் ஆகும்.
மொத்த விற்பனையாளர்கள், கம்பெனிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். காளான் வளர்ப்பு மூலம் இப்போது அவர்கள் வருடத்துக்கு ரூ.7.5 கோடி சம்பாதிக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications