இன்று பெரு நகரங்களில் வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயமாகவிட்டது, ஒருபக்கம் விலைவாசி உயர்வு என்றால் மறுபுறம் வீட்டு வாடகை என பல நெருக்கடிகள் சாமானிய மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் டிவிட்டரில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் செய்த பதிவு இளம்தலைமுறையினர் மத்தியில் பெரும் தாக்கத்தையும், விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
ப்ருத்வி ரெட்டி என்பவர் நம்மில் பலர் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான பிரச்சனையும் எதிர்கொண்டார், குடும்பம் ஒரு ஊரிலும், வேலை காரணமாக இவர் ஒரு ஊரிலும் இருக்க வேண்டிய கட்டாயம் உருவானது. ஆனால் இந்த முடிவை மிகப்பெரிய தவறு என புரிந்துக்கொண்டு பெங்களூரில் இருந்து ஹைதராபாத்-க்கு செல்ல முடிவு செய்தார்.

இந்த ஒரு முடிவின் காரணமாக மாதம் 40000 ரூபாய் வரையிலான பணத்தை சேமித்துள்ளார் ப்ருத்வி ரெட்டி. பெங்களூர் எந்த அளவுக்கு காஸ்ட்லியான நகரம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை, குறிப்பாக சமீபத்தில் வீட்டு வாடகை நிலைமையை பார்க்கும் போது சாமானிய மக்களை பயமுறுத்துகிறது.
இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் ப்ருத்வி ரெட்டி, பெங்களூர் விலைவாசியை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் சென்ற இவர் தற்போதும் 40000 ரூபாய் சேமிப்பதாக கூறிய அவர், இந்த தொகையில் ஒரு குடும்பம் ஈசியாக ஒரு மாத செலவுகளை சமாளிக்க முடியும் என தெரிவித்தார்.
தற்போது ஹைதராபாத்தில் ப்ருத்வி ரெட்டி தனது குடும்பத்துடன் நம்மதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார், பலருக்கு குடும்பத்தை விட்டு தனியாக இருப்பது பிடிக்கும், ஆனால் உண்மையில் அது நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்காது என தெரிவித்துள்ளார். இவருடைய பதிவுக்கு பலர் கமெண்ட் செய்துள்ளனர்.
தனியாக வாழ வேண்டும் என்பது overrated, மேலும் நம்முடைய பணிகளை செய்வதில் கூடுதல் நேரத்தை செலவிடுகிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் போது வேலை குறித்த யோசனை மட்டுமே நமக்கு இகுக்கும், ஆனால் தனியாக இருக்கும் போது அனைத்து விஷயங்களையும் யோசிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என ஒரு டிவிட்டர்வாசி கூறியுள்ளார்.
40000 ரூபாய்க்கு என்ன செலவு பெங்களூரில் செய்தீர்கள் என ஒருவர் கேட்க ப்ருத்வி ரெட்டி வீட்டு வாடகை, மெயின்டனென்ஸ், தண்ணீர், மின்சார கட்டணம், உணவு என விளக்கம் கொடுத்துள்ளார். வீட்டு வாடகை வேண்டுமெனில் இடத்திற்கு ஏற்றார் போல் மாறும் ஆனால் மற்றவை அனைவருக்கும் பொருந்தும்.
ப்ருத்வி ரெட்டி பதிவுக்கு பல கமெண்ட்கள் வந்த நிலையில் பல பதிவுக்கு பெங்களூர் Vs ஹைதராபாத் வகையில் வந்தது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அவர் இந்த பதிவு பெங்களூரா அல்லது ஹைதராபாதா என்பது இல்லை, hometown மற்றும் remote work குறித்தது.
மேலும் பெங்களூரில் கிடைக்கும் அதே சம்பளம் சொல்லப்போனால் அதைவிட அதிக சம்பளம் ஹைதராபாத் ஸ்டார்ட்அப்கள் தனக்கு அளித்ததாக கூறும் ப்ருத்வி ரெட்டி, பெங்களூரில் இருக்கும் எல்லா நல்ல விஷயங்களும் ஹைதராபாத்திலும் உள்ளது. இதேபோல் சில கெட்ட விஷயங்களும் இருப்பது இல்லை.
ப்ருத்வி ரெட்டி சொல்லும் கெட்ட விஷயங்கள் பட்டியலில் அதிகப்படியான டிராபிக், விலை அதிகமான உணவுகள், அதிகப்படியான வாடகை, குறைவான போக்குவரத்து செலவுகள், எல்லாவற்றுக்கும் மேல் நாங்கள் யாரையும் தெலுங்கு மொழியில் பேச வற்புறுத்துவது இல்லை. ஹைதராபாத்தில் ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்தும் ஓகே தான் என தெலுங்கானா அமைச்சர் KTR-ஐ டேக் செய்து பதிவிட்டு உள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications