ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் கால் பதித்து விட்டது. மென்பொருள்கள் மேம்பாடு, செயலிகள் உருவாக்கம் என மென்பொருள் பொறியாளர்களின் பணிகளை ஏஐ தொழில்நுட்பமே மேற்கொள்கிறது.
இதனிடையே Gartner என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் 80 சதவீத மென்பொருள் பொறியாளர்கள் தங்களுடைய வேலையை இழக்க கூடும் என தெரிவித்துள்ளது. கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தற்போது மென்பொருள் பொறியாளர்களாக இருக்கக்கூடியவர்கள் நவீன திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக natural-language prompt engineering மற்றும் retrieval-augmented generation ஆகிய பிரிவுகளில் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகளில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

தற்போது மென்பொருள் பொறியாளர்கள் செய்யும் வேலைகளை எல்லாம் செயற்கை நுண்ணறிவு செய்ய தொடங்கி விடும், அதற்காக இவர்களின் வேலை பறிபோய் விடும் என கூற முடியும் ஆனால் இவர்களின் வேலையின் தன்மை மாறும் என கூறப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலைவாய்ப்புகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கார்ட்னர் நிறுவனம் வெளியிட்டுள்ள மதிப்பாய்வின்படி செயற்கை நுண்ணறிவு ,மென்பொருள் பொறியாளர்களின் வேலையை முழுமையாக எடுத்துக் கொள்ளாது.
எனவே தற்போது மென்பொருள் பொறியாளர்களாக வேலை செய்பவர்கள் மற்றும் இந்த துறையில் படித்து வருபவர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக ஏஐ இன்டெக்ரேஷன் திறனை பெற்றுக் கொள்வது நலம் என கூறப்பட்டுள்ளது.
சிக்கலான மற்றும் புதுமையான மென்பொருள்களை வழங்குவதற்கு மனிதர்களின் நிபுணத்துவமும் கிரியேட்டிவிட்டியு தான் கட்டாயம் தேவைப்படும் ஆனால் சில குறிப்பிட்ட வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பமே செய்து முடித்து விடும் என்பதால் என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கூறுகிறது. இந்த ஆய்வு அறிக்கை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மென்பொருள் மேம்பாடுகளில் மூன்று நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலில் மனிதர்களோடு இணைந்து வேலை திறனை மேம்படுத்துவதற்கு உதவும். கோடிங் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வேலைகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தானாகவே செய்து முடிக்கும்.
எதிர்காலத்தில் மென்பொருள் உருவாக்கம், மேம்பாடுகளை ஏஐ மேற்கொள்ளும், எனவே ஏஐ உருவாக்கிய மென்பொருளை கையாளும் வகையில் திறன் கொண்ட பொறியாளர்கள் தேவை.
தற்போது மென்பொருள் மேம்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து விட்டது என்பதால் நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களுக்கு இந்த துறையில் பயிற்சி வழங்க வேண்டும் என இந்த அறிக்கை கூறுகிறது. இதனிடையே 56 சதவீத மென்பொருள் பொறியாளர்கள் மெசின் லேர்னிங் உள்ளிட்ட வேலைகளுக்கு அதிக அளவில் தேவை இருப்பதாக கருதுகின்றனர். தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அத்தகைய திறன்களை வளர்க்கும் வகையில் பயிற்சி வழங்க வேண்டும் என கூறுகிறார்களாம்.
Written by: Devika


Click it and Unblock the Notifications