யாரும் நினைக்காத வேகத்தில் உயரும் சோலார்.. 98% விலை குறைந்தால் இது தான் நடக்கும்..!!

இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் சுற்றுசூழல் பாதிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள வேளையில் பெரும்பாலான நாடுகள் கிரீன் எனர்ஜி உற்பத்திக்கு அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது.

கிரீன் எனர்ஜி துறையில் கடந்த சில வருடங்களாக சோலார் எனர்ஜி சிறிய அளவில் துவங்கி மிகப்பெரிய ஆதிக்கத்தை பெற்றுள்ளது, இது மட்டும் அல்லாமல் பெரும் பொருட் செலவில் உற்பத்தி செய்யப்படும் நியூக்ளியர் எனர்ஜியை காட்டிலும் அதிகப்படிான மின்சாரத்தை சோலார் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிலும் இந்தியா புதிய உச்சத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

யாரும் நினைக்காத வேகத்தில் உயரும் சோலார்..  98% விலை குறைந்தால் இது தான் நடக்கும்..!!

உலகின் மூன்றாவது பெரிய காற்று மற்றும் சோலார் மின்சார உற்பத்தியாளராக ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது சோலார் பயணத்தில் இந்தியாவின் முக்கிய மைல்கல் ஆக பார்க்கப்படுகிறது.

'எம்பர்ஸ் குளோபல் எலக்ட்ரிசிட்டி ரிவியூ' அறிக்கையின்படி, உலகளவில் மொத்த மின்சார உற்பத்தியில் 15% மின்சாரம், காற்று மற்றும் சோலார் சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் சோலார் மின்சார உற்பத்தியில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியாவில் சோலார் மின்சார உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்தாலும், சோலார் பேனல் விலை 98 சதவீதம் குறைந்தது மூலம் சோலார் பயன்பாடு அதிகரிக்க ஏதுவாக சூழ்நிலை அமைந்துள்ளது. இந்த விலை சரிவு இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தில், 8% நீர்மின்சக்தியும், 10% காற்று மற்றும் சூரிய சக்தியும் ஆகும். 2024-ஆம் ஆண்டில் இந்தியா 24 கிகாவாட் சூரிய சக்தி உற்பத்தி தளத்தை சேர்த்துள்ளது. இது 2023-ஐ விட இரு மடங்கு அதிகமாகும். இந்த வளர்ச்சி, இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திலும், நெட் ஜீரோ இலக்கை அடைவதிலும் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.

உலகளவில் சோலார் மின்சார உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் வளர்ந்து வருகிறது. 2004-இல் இருந்து சோலார் பேனல்களின் விலை 98% குறைந்துள்ளது. சில நாடுகளில் இது மரத்தை விட மலிவான விலையில் கிடைக்கும் காரணத்தால் வீட்டுக்கு வெளியே வேலிகளை அமைக்கும் போது மரத்திற்கு பதிலாக சோலார் பேனல் அமைத்து அதன் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் அளவுக்கு செலவு குறைந்ததாக உள்ளது.

யாரும் நினைக்காத வேகத்தில் உயரும் சோலார்..  98% விலை குறைந்தால் இது தான் நடக்கும்..!!

இதன் மூலம் கடந்த 8 ஆண்டுகளில் சோலார் மின்சார உற்பத்தி ஒரு மணிநேரத்திற்கு 100 டெராவாட் அளவில் இருந்து 1,000 டெராவாட் வரையில் உயர்ந்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இது 2,000 டெராவாட் ஆக உயர்ந்துள்ளது, இது மின்சார உற்பத்தி துறை வரலாற்றில் சோலார் புதிய சாகப்தத்தை படைத்துள்ளது.

யாரும் நினைக்காத வேகத்தில் உயரும் சோலார்..  98% விலை குறைந்தால் இது தான் நடக்கும்..!!

இதேபோல் இந்த ஏப்ரல் மாதம் வரலாற்றில் முதல் முறையாக, உலகளவில் சோலார் எனர்ஜி, அணுசக்தியை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்து, உலகின் நான்காவது பெரிய மின்சக்தி மூலமாக உயர்ந்துள்ளது. ஏப்ரல் 2020-இல் 79 டெராவாட் இருந்த சோலார் மின்சார உற்பத்தி, ஏப்ரல் 2025-இல் 233 டெராவாட் என மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என ஆக்ஸ்ஃபோர்டு ECI-இன் எரிசக்தி திட்டத் தலைவர் ஜான் ரோஸ்னோ கூறினார்.

யாரும் நினைக்காத வேகத்தில் உயரும் சோலார்..  98% விலை குறைந்தால் இது தான் நடக்கும்..!!

இந்தியாவின் சோலார் எனர்ஜி துறையானது, நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் நீண்டகாலக் கொள்கைகள் மற்றும் உத்திகள் முக்கிய உந்து சக்தியாக அமைந்துள்ளன என விக்ரம் சோலார் (Vikram Solar) நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கியானேஷ் சவுத்ரி தெரிலித்துள்ளார்.

இந்தியாவின் சோலார் எனர்ஜி முயற்சிகள் குறித்து கியானேஷ் சவுத்ரி தமிழ் குட்ரிட்டன்ஸ் உடன் பேசுகையில், "இந்தியாவின் சோலார் எனர்ஜி துறை தெளிவான மற்றும் நீண்ட கால கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிஎல்ஐ (PLI), ஏஎல்எம்எம் (ALMM), மற்றும் டிசிஆர் (DCR) போன்ற கொள்கைகள், சோலார் மின்சார உற்பத்தி திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றில் துறையில் விநியோகச் சங்கிலியை உருவாக்கியுள்ளன. இது தேசிய அளவில் மாபெரும் முன்னேற்றமாகும்," என்று கூறினார்.

மேலும் கியானேஷ் சவுத்ரி கூறுகையில் விக்ரம் சோலார், கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியாவின் சோலார் எனர்ஜி துறையுடன் இணைந்து வளர்ந்து, இன்று உற்பத்தி சிறந்து விளங்குவது மட்டும் அல்லாமல், புதுமை, பன்முகப்படுத்தல் மற்றும் சுயசார்பு முறையை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என தெரிவித்தார்.

மேலும் கியானேஷ் சவுத்ரி,"விக்ரம் சோலார், உற்பத்தி மட்டுமல்லாமல், புதுமை மற்றும் சுயசார்பு எனர்ஜி முறையை உருவாக்குவதற்கு முன்னோடியாக உள்ளது," என்று பெருமையுடன் தெரிவித்தார். இந்தியாவில் சோலார் எனர்ஜி என்பது புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கு முக்கியமானதாக அமைந்துள்ளது. இது நாட்டின் நீண்டகால எனர்ஜி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு உதவுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+