ஆண்களுக்கு இணையாக பெண்களும் எல்லா துறைகளிலும் தடம் பதிக்க தொடங்கி விட்டனர். ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த தொழிற்துறையில் பல பெண்கள் படிப்படியாக உயர்ந்து உச்ச பதவிகளை வகித்துள்ளனர். அவர்களின் ஒருவர் தான் சோமா மொண்டல்.
ஸ்டீல் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான SAIL-ன் தலைவர் பதவியில் இருந்த முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போர்ப்ஸின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலிலும் அவர் இடம் பெற்றுள்ளார்.

நடுத்தர குடும்பத்தில் பிறந்து ரூ.41,075 கோடி மதிப்பிலான அரசு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த சோமா மொண்டலின் வாழ்க்கை கதையை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்க.
ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் ஒரு பெங்காலி நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர் சோமா மொண்டல். இவரது தந்தை ஒரு விவசாய பொருளாதார நிபுணர். சோமா மொண்டல் ரூர்கேலாவில் உள்ள என்.ஐ.டி.யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்.
பின்னர் மத்திய அரசு நிறுவனமான நால்கோவில் வேலைக்கு சேர்ந்தார். கடின உழைப்பு மற்றும் அனுபவம் காரணமாக அந்நிறுவனத்தின் வர்த்தக பிரிவு இயக்குனராக உயர்ந்தார். 2017ல் ஸ்டீல் அதார்ட்டி ஆஃப் இந்தியா (செயில்) நிறுவனத்தின் இயக்குனராக பணியமர்த்தப்பட்டார்.
2021ல் அவர் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான பொது நிறுவனங்களின் நிலை மன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டில் செயில் நிறுவனத்தின் தலைவராக உயர்த்தப்பட்டார்.
இதனையடுத்து அந்நிறுவனத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்றார். 2023 ஏப்ரல் 30ம் தேதியன்று பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். உலோக துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
அவர் செயில் நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது, அதுவரை இல்லாத அளவுக்கு அந்நிறுவனத்தின் நிதி வளர்ச்சியை பதிவு செய்தார். அவர் தலைமை பொறுப்பில் இருந்த முதல் ஆண்டில் செயில் நிறுவனத்தின் லாபம் 3 மடங்கு அதிகரித்து ரூ.12,000 கோடியாக உயர்ந்தது.
கடந்த 6ம் தேதி நிலவரப்படி செயில் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.41,075ஆக இருந்தது. 2023ம் ஆண்டுக்கான போர்ப்ஸின் உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் 70வது இடத்தை சோமா மொண்டல் பிடித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications