வாவ் இது சூப்பரான விஷயமாச்சே.. இந்த துறையில் எல்லாம் வேலை வாய்ப்பு அதிகரிக்குமாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலையில் மனிதர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளவே போராடி வருகின்றனர். ஆனால் இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக பணியிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

 

அதிலும் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக இருக்கும் வேலை வாய்ப்புகளாவது இருக்குமா? இல்லையா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஏனெனில் கண்ணுக்கு தெரியாத கொரோனா என்னும் அரக்கனால் ஒரு புறம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், முடங்கிக் கிடக்கும் நிறுவனங்கள், ஆலைகள் என அனைத்தும் முடங்கிக் கிடக்கின்றன.

பணியமர்த்தல் அதிகரிக்கும்

பணியமர்த்தல் அதிகரிக்கும்

கல்வித்துறை மற்றும் ஹெல்த்கேர் உள்ளிட்ட சில துறைகளில் லாக்டவுன் நீடித்தால் இந்த துறைகளில் பணியமர்த்தல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த ஆய்வினை டீம்லீஸ் நிறுவனம 3,500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

எந்தெந்த துறையில் அதிகரிக்கும்

எந்தெந்த துறையில் அதிகரிக்கும்

தொற்று நோய் பல நிறுவனங்களை குறைக்க கட்டாயப்படுத்தியுள்ளது. எனினும் சில நிறுவனங்கள் கொரோனா வைரஸுக்கு பின்பு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விரைவில் பணியமர்த்துவதற்காக தங்கள் விருப்பத்தினை வெளிபடுத்திய நிறுவனங்களில் சுகாதாரம், ஆன்லைன் கல்வி, ஈ-காமர்ஸ் மற்றும் தொகுக்கப்பட்ட நுகர்வோர் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

சில துறைகள் சற்று பாதிக்கப்படலாம்
 

சில துறைகள் சற்று பாதிக்கப்படலாம்

எனினும் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் பல உற்பத்தி நிறுவனங்களால் பணியமர்த்தப்படுவது சற்று பாதிக்கப்படலாம் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. பணியமர்த்தல் எதிர்காலத்தில் மாறக்கூடும் என்றாலும், சில முதன்மை துறைகளில் பணியமர்த்தல் என்பது பெரும்பகுதி அடுத்த ஆறு மாதங்களில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துறைகள் முன்னேற்றம் காணலாம்

இந்த துறைகள் முன்னேற்றம் காணலாம்

மேற்கண்ட இந்த ஆய்வில் சுகாதார மற்றும் மருத்துவ துறையில் பணியமர்த்தல் என்பது 33% இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வித் துறையும் மற்றும் ஆன்லைன் கல்வித் துறையும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் தற்போது நிலவி வரும் நெருக்கடியான நிலையில் தொலைதூர கற்றல்களுக்கான தீர்வுகளை அதிகரிப்பதற்கு இது வழிவகுக்கிறது.

அதிக நம்பிக்கை

அதிக நம்பிக்கை

இங்கு பதிலளித்தவர்கள் 27% புதிய பணியமர்த்தல் குறித்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். குறிப்பாக பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள், பண்னை உபகரணங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியமர்த்தல் குறித்து அதிக நம்பிக்கையுடன் இருக்ககூடும்.

கிராமப்புறங்கள் அதிகரிக்கும்

கிராமப்புறங்கள் அதிகரிக்கும்

நாட்டில் நிலவி வரும் லாக்டவுனுக்கு மத்தியில் உற்பத்தி மற்றும் வி நியோக சங்கிலி பாதித்துள்ளது. ஈ- காமர்ஸ் துறையில் பணியமர்த்தல் என்பது 3 வது இடத்தினை பிடித்து 26% பணியமர்த்தலை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதே கிராமப்புறங்களில் ஒரு நல்ல பருவமழையும் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு அரசாங்கத்தின் அதிகரித்த ஒதுக்கீடு, கிராமப்புறத் துறையில் பல்வேறு வகையான வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Some sectors not hit by coronavirus, may see more hiring’s

No job hiring.. Some sectors not hit by coronavirus, may see more hiring’s
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X