கம்பியூட்டர் நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் நிலையில் சாமானிய மக்களும் வாங்கும் அளவிற்கு வர்த்தகம் மாற்றிய காலத்தில் இருந்தே உலக நாடுகளில் டெக் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் தான் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த நிலையில், தற்போது அனைத்து துறையிலும் டெக் உதவிகள் இல்லாமல் இயங்க முடியாத நிலைக்கு மாற்றிய பின்பு கேட்கவா வேண்டும்.
இந்தச் சூழ்நிலையில் டெஸ்லா நிறுவனத்தின் வெற்றியும், டெக் நிறுவனங்களுக்கு எலட்க்ரிக் வாகன பிரிவில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து எலான் மஸ்க் பேச்சுக்கு பின்பு பல முன்னணி டெக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
டெஸ்லா நிறுவனம்
டெஸ்லா நிறுவனத்தின் வெற்றிக்கு பின்பு எலான் மஸ்க் தனது நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்க டெஸ்லா ஜிகாபேக்ட்ரியை சீனாவில் துவங்கியது. அடுத்தச் சில வருடத்தில் சீனாவில் ஹூவாய், சியோமி போன்ற பல டெக் நிறுவனங்கள் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்குவதாக அறிவித்தது.
எலக்ட்ரிக் வாகனம்
இதற்கிடையில் இந்தியாவில் ஓலா, அமெரிக்காவில் ஆப்பிள் எனப் பல முன்னணி டெக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கியது. தற்போது உலகளவில் தரமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்குப் பெயர்போன ஜப்பான் நாட்டின் சோனி நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்புத் துறையில் இறங்குவதற்கான திட்டத்தைத் தனது நிறுவனத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
டோயோட்டா நிறுவனம்
ஜப்பான் நாட்டின் டோயோட்டா நிறுவனம் ஏற்கனவே எலக்ட்ரிக் கார், ஹைட்ரஜெட் செல் கார்களைத் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் தற்போது சோனி இத்துறையில் குதிப்பது ஜப்பான் பெருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஊந்து சக்தியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சோனி நிறுவனம்
சோனி நிறுவனம் தனது வலிமையான திறன்களில் ஒன்றான எண்டர்டெயின்மென்ட், சென்சார் ஆகிய பிரிவின் மூலம் எலக்ட்ரிக் நெக்ஸ்ட் ஜெனரேஷன் மொபிலிட்டி பிரிவில் ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
சோனி மொபிலிட்டி
இப்புதிய திட்டத்திற்காகச் சோனி நிர்வாகம் சோனி மொபிலிட்டி என்ற சிறப்பு நிறுவனத்தை உருவாகி அதன் மூலம் விரைவில் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாகச் சோனி நிறுவனத்தின் சேர்மன் கெனிச்சிரோ யோஷிடா தெரிவித்துள்ளார்.
கெனிச்சிரோ யோஷிடா
கெனிச்சிரோ யோஷிடா இதுகுறித்து பேசுகையில் எங்களுடைய இமிஜிங், சென்சிங், கிளவுட், 5ஜி மற்றும் எண்டர்டெயின்மென்ட் தொழில்நுட்பம் ஆகிய அனைத்தையும் ஒன்று சேர்ப்பது மூலம் எலக்ட்ரிக் வாகன பிரிவில் ஆதிக்கம் செலுத்து முடியும் எனத் தான் நம்புவதாக அறிவித்துள்ளார்.
VISION-S 02 எஸ்யூவி கார்
கெனிச்சிரோ யோஷிடா முதல்கட்டமாக VISION-S 02 என்னும் மாதிரி எஸ்யூவி கார்-ஐ அறிமுகம் செய்தார், இதற்கு முன்பு VISION-S 01 என்ற பெயரில் கூபே காரை ஐரோப்பாவில் டிசம்பர் 2020ல் அறிமுகம் செய்தது சோனி.
சோனி பங்குகள்
மேலும் சோனி மொபிலிட்டி நிறுவனம் துவங்குவது குறித்து வெளியான அறிவிப்பு மூலம் சோனி பங்குகள் 4.2 சதவீதம் வரையில் உயர்ந்தது. சியோமியின் திட்டம் என்ன தெரியுமா..? இதேபோல் ஆப்பிள் சில மாதங்கள் முன்பு தென் கொரிய கார் நிறுவனத்துடன் போட்ட கூட்டணி தெரியுமா..?


Click it and Unblock the Notifications