சென்னை: இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு பல முயற்சி செய்து வரும் வேளையில், இதில் முக்கியமான முயற்சியாக பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு என்ற இலக்கை அடைய அரசு விரைவில் எட்ட தயாராகி வருகிறது. இந்த நிலையில் தற்போது டீசலில் 5% எத்தனால் கலப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்த புதிய திட்டம் குறித்து கடந்த வாரம் பிரதமர் அலுவலகத்தில், இத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைச்சகங்களுடனான முக்கிய கூட்டம் நடைபெற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டீசலில் எத்தனால் கலப்பின் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு குறையும், இதன் மூலம் ஏற்படும் நன்மைகளை விலை வாயிலாக மக்கள் லாபம் ஏற்பட வாய்ப்புள்ளது.

2023 ஆம் ஆண்டு மே மாதத்தில், பெட்ரோலில் எத்தனால் கலப்பு சராசரியாக நாடு முழுவதும் 15% ஐ தாண்டியது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் எத்தனால் உற்பத்தி அதிகரித்த காரணத்தால் இந்த இலக்கை பயோடீசல் உற்பத்தியாளர்கள் மிகவும் எளிதாக சாத்தியமானது. டீசலில் எத்தனால் கலப்பு செய்வதற்கான அடிப்படை கட்டமைப்பை அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.
"டீசலில் எத்தனால் கலக்க வேண்டுமாயின் அதிக அளவு பசுமை எரிபொருளான எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கும் என்றாலும், இது சுற்றுச்சூழலுக்கு நல்லது மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து வெளிநாட்டுச் செலவினத்தை மிச்சப்படுத்தும்" என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி அமைப்பு (ARAI) 2018-19 ஆம் ஆண்டில் BS-III மற்றும் BS-VI பேருந்துகளில் எத்தனால் கலந்த டீசல் பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடத்தியது. இதில் வாகன செயல்திறன், உமிழ்வு மற்றும் ஆயுளை மதிப்பிட்டது. இதேபோல் 500 மணிநேர சோதனையில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை மற்றும் எரிபொருள் பயன்பாடு சாதாரண டீசலை விட சற்று குறைவாக இருந்தது என ஆய்வின் முடிவுகள் கூறுகிறது.
ஆனால், BS-VI வாகனங்களில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட வேண்டும். பொதுத்துறை கச்சா எண்ணெய் நிறுவனம் ஒன்று விரைவில் கனரக வாகனத்தில் பயோடீசல் கலந்த எரிபொருளை சோதனையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி சமீபத்தில் ராஜ்யசபாவில் டீசலில் எத்தனால் கலப்பது தற்போது சோதனை நிலையில் உள்ளது என்று இத்திட்டம் குறித்து உறுதி செய்தார்.


Click it and Unblock the Notifications