இந்தியாவில் பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் என பலரும் வரி ஏய்ப்பு செய்வதற்காகவும் வருமான வரித்துறையிடம் இருந்து தப்பிப்பதற்காகவும் பினாமி மூலம் சொத்து பரிமாற்றம், பணப் பரிமாற்றங்களை மேற்கொள்கின்றனர். இந்த முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.
பினாமி சொத்து: அரசியல்வாதிகள் , தொழிலதிபர்கள் ஏழை மக்கள், பிச்சைக்காரர்கள், பழங்குடியினர் என முறையாக பான் கார்டு, வங்கி கணக்கு , ஆதார் போன்றவை இல்லாத மக்களை தேடி பிடித்து அவர்கள் பெயரில் போலி நிறுவனங்களை தொடங்குவது, பணப் பரிமாற்றம் செய்வது, நிலம் வாங்குவது என முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அண்மையில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படத்தில் இது தான் கதை அம்சமாக இருக்கும்.

பினாமி என்றால் என்ன: பிச்சைக்காரர்களை கொண்டு அவர்கள் பெயரில் போலி நிறுவனங்களை தொடங்கி இடம் வாங்குவது பணம் பரிமாற்றம் செய்வது என மோசடி செய்வார்கள். நிஜத்திலும் இது நடக்கிறது என்பது தான் உண்மை. அதாவது ஒரு நபர் பணத்தை கொடுத்து சொத்து வாங்குவார் ஆனால் அவர் பெயரில் இல்லாம்ல் அவருக்கு சம்மந்தம் இல்லாத மூன்றாவது நபரின் பெயரில் வாங்குவார். இதற்கு அந்த மூன்றாவது நபரின் ஆவணங்களையும் அடையாளங்களையும் பயன்படுத்தி கொள்வார். இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கிலான ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்படுகிறது.
நேரடி வரிகள் வாரியம்: பினாமி சட்டத்தை கடுமையாக்கும் வகையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் ஒரு கமிட்டியை அமைத்திருந்தது. அந்த கமிட்டி தன்னுடைய பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. அதில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஆதார் தகவல்கள், மாநில பத்திரப்பதிவு விவரங்கள் மற்றும் பரிவாகனில் இருக்கக்கூடிய வாகன தரவுகளை எளிமையாக அணுகும் வகையில் அனுமதி தர வேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது.
தரவுதளங்களை அணுக அனுமதி: போலியாக தொடங்கப்படும் நிறுவனங்கள் , போலியாக வாங்கப்படும் பினாமி சொத்துக்களை கண்டறிவதற்கு இந்த அனுமதி மிகவும் அவசியமென கேட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனத்தின் அனைத்து இயக்குனர்களையும் அவர்களின் வருமானத்தையும் கண்காணிக்க வேண்டும், அதில் ஏதேனும் ஒரு சிலருக்கு எந்த ஒரு வருமானமும் இல்லை, அவர்களில் பெரும்பாலானவர்கள் வருமான வரி கூட தாக்கல் செய்வதில்லை அல்லது அவர்களின் பெயரில் கடன்கள் இருக்கின்றன எனும் போது அவற்றை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வருமான வரி அதிகாரிகளுக்கு அனுமதி: பொதுவாக பினாமி பரிவர்த்தனைகளில் ஒரு நபர் பணத்தை கொடுப்பார் ஆனால் சொத்து அந்த நபரின் பெயரில் வாங்கப்படாது மூன்றாவதாக ஒரு நபரின் பெயரில் வாங்கப்படும் . இந்தியாவில் அப்பாவி ஏழை மக்களை பயன்படுத்திக் கொண்டு கோடீஸ்வரர்கள் பலரும் இந்த பினாமி முறையில் சொத்துக்களை வாங்கி ஆட்டம் காட்டி வருகின்றனர் . 30 லட்சம் ரூபாய்க்கும் கீழ் உள்ள சொத்து பரிமாற்றங்களில் பான் எண் கட்டாயம் இல்லை என்பது இவர்களுக்கு வசதியாக உள்ளது. இது தான் வருமான வரி துறை அதிகாரிகளுக்கு பினாமிகளை கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
இந்த சூழலில் தான் ஆதார் மூலம் வருமானவரித்துறையின் இன்சைட் போர்ட்டலை இணைத்தால் இது பினாமி சொத்துக்களை கண்டறிய பெரிய அளவில் உதவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆதார் இணைக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளின் விவரங்களை view only முறையிலாவது அணுகக்கூடிய வகையில் மாற்ற வேண்டும் அப்போதுதான் பினாமிகளை கண்டறிய முடியும் என அதிகாரி ஒருவர் எக்னாமிக்ஸ் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருக்கிறார் .


Click it and Unblock the Notifications