மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமானம் நிறுவனம் லேரசன் & டூப்ரோ கட்டுப்பாட்டில் உள்ள எல்&டி இன்போடெக், மைண்ட்ட்ரீ நிறுவனங்கள் விரைவில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் எல்&டி நிறுவனம் வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் எல்&டி குழும தலைவர் என ஊடகங்களுடன் பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. எனவே அது எல்&டி இன்போடெக் - மைண்ட்ட்ரீ இணைவு குறித்த அறிவிப்பிற்காக இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.
லேரசன் & டூப்ரோ
எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளும், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 61 சதவீத பங்குகளும் லேரசன் & டூப்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இரண்டு நிறுவனங்களும் இணைவது குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தையை நடத்துகின்றன. எப்போது வேண்டுமானாலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சந்தை மூலதனம்
எல்&டி இன்போடெக் நிறுவனத்திடம் 1.03 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனமும், மைண்ட்ட்ரீ நிறுவனத்திடம் 65,285 கோடி ரூபாய் சந்தை மூலதனமும் உள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்தால் டெக் மஹிந்தரா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக எல்&டி இன்போடெக் உருவாகும். இரண்டு நிறுவனங்களிலும் மொத்தமாக 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இணைந்தால் என்ன லாபம்?
கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்&டி இன்போடெக் - மைண்ட்ட்ரீ என இரண்டு நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் வணிகம் இன்னும் விரிவடையும், செலவு மற்றும் ரிஸ்க் குறையும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
யார் அடுத்த சி.ஈ.ஓ
அதுமட்டுமல்லாமல் இரண்டு நிறுவனங்கள் இணையும் போது எல்&டி இன்போடெக் தலைவர் சஞ்சய் ஜலோனா அல்லது மைண்ட்ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டெபாஷிஸ் சாட்டர்ஜி என யார் தலைமையில் இந்த நிறுவனம் செயல்படும் என்பதும் கேள்வியாக உள்ளது. இவற்றுக்கு எல்லாம் இணைவு அறிவிப்பிற்கு பிறகே ஒரு நல்ல முடிவு வரும்.
பங்குகள்
இன்றைய சந்தை நேர முடிவில் எல்&டி இன்போடெக் பங்குகள் 173.45 புள்ளிகள் சரிந்து 4,593.10 புள்ளிகளாகவும், மைண்ட்ட்ரீ பங்குகள் 136.25 புள்ளிகள் சரிந்து 3,374.65 ரூபாயாகவும் வர்த்தகமாகி இருந்தன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications