மாறுகிறதா வட சென்னையின் அடையாளம்?... தமிழக அரசின் திட்டம் என்ன?

சென்னை: ஐடி நிறுவனங்கள் என்றால் சென்னையின் தெற்கு பகுதி, பெட்ரோ கெமிக்கல், வாகன பாகங்கள் ஸ்டீல் பிளாண்ட்கள் என்றால் வடசென்னை என்ற ஒரு நிலைமை இருக்கிறது. எனவே வடசென்னையின் அடையாளத்தை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழக அரசு வடசென்னை பகுதியில் பல்வேறு ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள், ஜிசிசி மையங்கள், ஃபின்டெக் நிறுவனங்களை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு மாதவரம் பகுதியில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரம் (TN TECH CITY) அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

மாறுகிறதா வட சென்னையின் அடையாளம்?... தமிழக அரசின் திட்டம் என்ன?

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு அறிவு நகரம் (Tamilnadu knowledge city) அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதேபோல ஆவடிக்கு அருகே பட்டாபிராம் பகுதியில் 21 அடுக்கு கொண்ட டைடல் பார்க் கட்டப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு சொந்தமான தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோ மாதவரம் பகுதியில் தமிழ்நாடு தொழில்நுட்ப நகரத்தை அமைத்து வருகிறது. இங்கே அடுத்த 20 ஆண்டுகளில் 33,610 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படும் என தெரிகிறது.

இந்த 150 ஏக்கர் பரப்பளவிலான தமிழ்நாடு தொழில்நுட்ப நகரத்தில் ஐடி, லைஃப் சைன்ஸ், ஏரோஸ்பேஸ், பாதுகாப்பு, விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல டேட்டா ஸ்டோரேஜ்க்கான டிமாண்ட் அதிகரித்துள்ளதால் இங்கே ஒரு டேட்டா பூங்காவும் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக ஊத்துக்கோட்டை பகுதியில் இரண்டு கட்டங்களாக 1424 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படுகிறது. இது உலக தரத்திலான கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையங்களை இங்கே ஈர்க்கும் என தெரிவிக்கப்படுகிறது. திருவள்ளூர் பகுதி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு பெயர் போனதால் இந்த பகுதியில் இந்த அறிவு நகரத்தை அமைப்பது தான் சிறந்ததாக இருக்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு உலக உற்பத்தி மையம் என்ற பெயரை ஏற்கனவே பெற்றுவிட்டது தற்போது அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது நம்முடைய வேலை என தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

நம் மாநில மக்களுக்கு சரியான ஊதியம் வழங்கக்கூடிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என தெரிவித்துள்ளார். அறிவு சார்ந்த ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவது தான் அரசின் இலக்கு அந்த தொலைநோக்கு பார்வையில் தான் இந்த டெக் நகரங்கள் நிறுவப்படுகின்றன என கூறியுள்ளார்.

மேலும் புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்களுக்கான மையமாக வடசென்னையை உருவாக்குவதும் அரசின் இலக்கு என கூறியுள்ளார். தொழில்துறையினருக்கும் அந்த துறை சார்ந்து கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த டெக் நகரங்கள் அமையும் என சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு தேவையான தொழில்நுட்பங்களை உருவாக்கக்கூடிய ஒரு நகரமாக டெக் சிட்டி இருக்கும் என அவர் கூறியுள்ளார். செமி கண்டக்டர், விண்வெளித் துறை ஆகியவற்றிலும் இந்த டெக் சிட்டி பெருமளவில் கால் பதிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+