சர்வதேச பொருளாதார நிலவரத்திற்கு ஏற்பவும் உள்நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த வண்ணம் இருக்கின்றன. 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கக்கூடிய கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 1 சதவீதம் வரை குறைத்து இருக்கிறது.
இது நேரடியாகவே மக்கள் வாங்கிய வீட்டுக் கடன் , வாகன கடன் மற்றும் தங்க நகை கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் ஒரு சதவீதம் வரை குறைய செய்திருக்கிறது. இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான இந்தியர்கள் வங்கிகளுக்கு தாங்கள் செலுத்தக்கூடிய கடனில் ஒரு கணிசமான தொகையை சேமிக்க முடிந்திருக்கிறது.

இத்தகைய சூழலில் இந்த ஆண்டுக்குள் மேலும் ஒரு வட்டி விகித குறைப்பு நடவடிக்கை இருக்குமா என்ற கேள்வி தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த மாத தொடக்கம் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் மேற்கொண்டு வட்டி குறைப்பு இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி அப்படி எந்த ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கையும் அறிவிக்கவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஒருமுறை 50 அடிப்படை புள்ளிகளும் இரண்டு முறை தலா 25 அடிப்படை புள்ளிகள் என மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அதாவது ஒரு சதவீதம் வரை வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்தது. இதனை அடுத்து பல்வேறு வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த வழங்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களை ஒரு சதவீதம் குறைத்து இருக்கின்றன .
இந்த சூழலில் தான் சர்வதேச பங்குச்சந்தை தரகு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான கோல்டுமேன் சாக்ஸ் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய ரிசர்வ் வங்கி மேலும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கையை அறிவிக்கும் என்ற ஒரு நற்செய்தியை வெளியிட்டு இருக்கிறது. அண்மையில் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிகளை குறைத்தது இதன் மூலம் பல்வேறு பொருட்களின் விலை குறைந்திருக்கிறது இது மக்களிடையே நுகரும் போக்கையும் பணப்புழக்கத்தையும் அதிகரிக்க செய்திருக்கிறது. ஏற்கனவே அறிவித்த வட்டி குறைப்பு நடவடிக்கையும் மக்களுக்கு ஒரு கணிசமான சேமிப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறது .
இத்தகைய சூழலில் தான் மேலும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்ற கணிப்பை வெளியிட்டு இருக்கிறது கோல்ட்மேன் சாக்ஸ். இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ஒரு வட்டி குறைப்பு நடவடிக்கை இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம் அண்மையில் அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி திருத்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது இதோடு சேர்த்து கடன் தேவையை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கலாம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது . வரும் டிசம்பர் 3 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications