இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் இன்றைய வர்த்தக சந்தையின் முக்கியமான பிராண்ட் அம்பாசிட்டராகவும், ஒரு பிராண்டின் முகமாகவும் விளங்குகின்றனர். தோனி, சச்சின் துவங்கி வைபவ் சூர்யவன்ஷி வரையில் விளம்பரங்கள் மூலம் கோடிகளை அள்ளுகின்றனர். இதேபோல் மறுபக்கம் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதை தாண்டி பல முதலீடுகளையும், பிஸ்னஸ்-களையும் செய்து வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச போட்டியில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற ரோடு மேப் போட்டுக்கொடுத்து, இந்திய அணியின் அடையாளத்தை மாற்றிய சிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலி, புதிய அடையாளத்துடன், புதிய பிஸ்னஸ் ஐடியா உடன் வர்த்தக சந்தையில் குதித்துள்ளார்.

சவுரவ் கங்குலி, இந்தியாவின் வளர்ந்து வரும் பாரம்பரிய ஆடைகள் சந்தையில் தனது முத்திரையை பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதுவும் குறிப்பாக தனது சொந்த மாநிலமான மேற்கு வங்களத்தின் முக்கிய பண்டியான துர்கா பூஜா-வை முன்னிட்டு தனது ஆடை வர்த்தகத்தை துவங்தியுள்ளார்.
சவுரவ் கங்குலி மிந்த்ரா உடன் இணைந்து, தனது புதிய பிராண்டான சௌராக்யா-வை (Souragya) அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பிரீமியம் பாரம்பரிய உடை பிராண்ட், துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு அறிமுகமாகியுள்ளது மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற இலக்காக கொண்டு சந்தைக்கு வந்துள்ளது.
மிந்த்ராவின் மொத்த விற்பனைப் பிரிவான மிந்த்ரா ஜாபாங் இந்தியா உடன் சவுரவ் கங்குலி இணைந்து சௌராக்யா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சௌராக்யா, மேற்கு வங்காளத்தின் தனித்துவமான வடிவமைப்புகள் மற்றும் உருவ அமைப்புகளை தேசிய அளவில் பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த பிராண்ட், பாரம்பரிய உடைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், எதிர்காலத்தில் மேலும் பல ஃபேஷன் உடைகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இது, இந்தியாவின் வளர்ந்து வரும் ஃபேஷன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளது.
சவுரவ் கங்குலி குடும்பம் ஸ்டீல் தொழிற்சாலையை நீண்ட காலமாக நிர்வாகம் செய்து வருகிறது. அவரது தாத்தா, தந்தை என அனைவரும் ஸ்டீல் அதிபர்கள் ஆவார், சவுரவ் கங்குலி கிரிக்கெட் பக்கம் திரும்பினாலும் தொடர்ந்து வர்த்தகத்தில் கண் வைத்திருந்தார். தற்போது சவுரவ் கங்குலி குடும்பம் மேற்கு வங்காள பகுதியில் மூன்று ஸ்டீல் தொழிற்சாலையை வைத்துள்ளது.
கிரிக்கெட், பிராண்ட் அம்பாசிட்டர், ஸ்டீல் தொழிற்சாலை, தற்போது ஆடை பிராண்ட் என பன்முக வர்த்தகத்தை சவுரவ் கங்குலி கொண்டுள்ளார். ஆயினும் சச்சினின் 1250 கோடி ரூபாய் சொத்து மதிப்பை ஒப்பிடுகையில் சவுரவ் கங்குலி 700 கோடி ரூபாய் சொத்து மதிப்பை மட்டுமே வைத்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications