கொரோனாவால் உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வர்த்தக வரலாறு காணாத வகையில் மோசமான சரிவை சந்தித்து வரும் வேளையில், உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பட்டியலில் இருக்கும் இந்தியாவின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்து ஒட்டுமொத்த மக்களை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், இன்று தென் ஆப்பிரிக்கா நாட்டின் பொருளாதாரத் தரவுகள் வெளியாகியுள்ளது.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வந்த வல்லரசு நாடுகளும் இந்தக் கொரோனா பாதிப்பால் நிலைகுலைந்து போய் நிற்கும் வேளையில், தென் ஆப்பிரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பொருளாதார வல்லுநர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் நிலை என்ன வாங்கப் பார்ப்போம்.
தென் ஆப்பிரிக்கா பொருளாதாரம்
2020ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தை கொரோனாவால் பெரிய அளவிலான பாதிப்பைச் சந்தித்து மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.
ஏப்ரல் - ஜூன் காலாண்டில் தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் 51 சதவீதம் வரையில் சரிந்துள்ளது என அந்நாட்டுத் தேசிய புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
லாக்டவுன்
கொரோனா தொற்றைத் தென் ஆப்பிரிக்காவில் கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு நாட்டு அரசு மார்ச் 27ஆம் தேதி நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் ஊரடங்கை அறிவித்தது. இதனால் தென் ஆப்பிரிக்காவின் மொத்த வர்த்தகச் சந்தையும் முடங்கிப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னிடவை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியத் துறைகள்
கடுமையான கட்டுப்பாடுகளால் தென் ஆப்பிரிக்காவின் கட்டுமானம், உற்பத்தி, சுரங்கம் துறை போன்ற முக்கியமான வர்த்தகத் துறைகள் சுமார் 70 சதவீத வர்த்தக முடக்கத்தை எதிர்கொண்டது. இதன் வாயிலாகவே தற்போது தென் ஆப்பிரிக்காவின் பொருளாதாரம் கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டைக் காட்டிலும் 51 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
ரெசிஷன்
தென் ஆப்பிரிக்கா நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருப்பது குறிப்பிடத்தக்கது, கடந்த 2 வருடத்தில் 2வது முறையாகத் தற்போது கொரோனாவால் ரெசிஷன் அறிவித்துள்ளது. மார்ச் காலாண்டில் தென் ஆப்பிரிக்கா -2 சதவீதம் வரையில் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள்
ஜூன் காலாண்டில் கொரோனா பாதிப்பில் மீண்டு சீனா மட்டுமே 3.2 சதவீத பொருளாதார வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.
- அமெரிக்கா = -9.1 சதவீத சரிவு
- ஜப்பான் = -9.9 சதவீத சரிவு
- ஜெர்மனி = -11.3 சதவீத சரிவு
- கனடா = -13 சதவீத சரிவு
- இத்தாலி = -17.7 சதவீத சரிவு
- பிரான்ஸ் = -18.9 சதவீத சரிவு
- பிரிட்டன் = -21.7 சதவீத சரிவு
- இந்தியா = -23.9 சதவீத சரிவு
- தென் ஆப்பிரிக்கா =- 51 சதவீத சரிவு
More From GoodReturns

'எனர்ஜி லாக்டவுன்' உலகம் நாடுகளை அச்சுறுத்தும் புதிய பிரச்சனை.. இந்த 10 விஷயம் நடக்கணும்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications