இந்தியாவில் பிறந்த தென் ஆப்பிரிக்கா பணக்காரரான அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா ஆகியோர் மற்றும் அவரது குடும்பத்தின் சொத்துக்களைக் கைப்பற்றத் தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல கோடி ரூபாய் பண மோசடி செய்த காரணத்திற்காகத் தென் ஆப்ரிக்காவின் National Prosecuting Authority (NPA) அமைப்பு, இன்டர்போல் அமைப்பிடம் குப்தா குடும்பத்தை மொத்தமாகக் கைது செய்ய ரெட் நோட்டீஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அதுல் குப்தா, ராஜேஷ் குப்தா, அவர்களது மனைவிகள் சதைதாலி, ஆர்த்தி ஆகியோரின் சொத்துக்களைக் கைப்பற்றவும், வங்கிகள் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது தென் ஆப்ரிக்கா நீதிமன்றம்.
தென் ஆப்ரிக்காவில் இருந்து பல பில்லியன் டாலர் மதிப்பிலான ரேன்டு வெளிநாடுகளுக்கு முறையற்ற வகையில் பரிமாற்றம் செய்து மோசடி செய்து, தற்போது குடும்பத்துடன் துபாயில் மறைந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அரசு குப்தா குடும்பத்தைத் திரும்பவும் தென் ஆப்ரிக்காவிற்கு அழைத்து வர இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு extradition papers அனுப்பியுள்ளது. குப்தா குடும்பம் தென் ஆப்ரிக்காவில் நிறுவனங்கள், சொத்துக்கள், தீவுகள் எனப் பல சொத்துக்களை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications