மும்பையை சேர்ந்த சௌத் பாம்பே பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான மார்க்கெட்டிங் நிபுணர் அநாத். இவர், மாதம் ரூ.2.67 லட்சமும், ஆண்டுக்கு ரூ.40 லட்சமும் வருமானம் பெறுவதாக கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக வைரலாகும் அந்த வீடியோவில், அநாத் தனது மாத வருமானம் எவ்வாறு செலவாகிறது என்பது குறித்து பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் அதிக சம்பளம் இல்லாமல் சிறிய வேலைகளில் தொடங்கி, அனுபவம் பெற்றேன். தொடர்ந்து கற்றுக்கொண்டேன். இன்று நான் இந்தியாவிலேயே, ரிமோட் வேலை (remote job) மூலம் அதிக சம்பளமுடன் வேலை செய்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். கடந்தாண்டு (2024) கல்விப்பட்டம் பெற்ற பிறகு, தனது கனவு வேலையை அடைய விரும்பிய அநாத், அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றார்.

அங்கு முதன்முதலாக ஒரு இந்திய மளிகைக் கடையில் (Indian grocery store) இலவச இண்டர்ன்ஷிப் (unpaid internship). அதாவது, சம்பளமே இல்லாமல் வேலை செய்தார். அந்த கடையில் அவர் பிராண்டிங் வேலைகள் (branding work), விளம்பர உத்திகள் மற்றும் கைவினை வேலைகள் என அனைத்தையும் செய்தார். ஒரு மார்க்கெட்டிங் நிபுணராகப் பளிச்சென்று விளங்க வேண்டும் என்ற அவரது கனவுக்காகவே, ஆரம்பத்தில் எந்தச் சம்பளமும் இல்லாமல் உழைத்துள்ளார்.
நியூயார்க்கில் சில மாதங்கள் வேலை பார்த்த பிறகு, நிம்மதி கொடுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சியில் (marketing agency) வேலைக்கு சேர்ந்தார். இந்த வேலைக்கு அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால், அவர் சம்பளமாக மணிக்கு $20 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,600) மட்டுமே பெற்றார். நியூயார்க் போன்ற பெரிய நகரில் இது அவருக்குத் தேவையான அடிப்படையில் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.
ஆனால், சில மாதங்கள் கடுமையாக உழைத்த பிறகு, அங்கு முழுநேரமாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அந்த வேலைக்கு அவருக்குக் கொடுக்கப்பட்ட ஆண்டு சம்பளம் $60,000 (இந்திய ரூபாயில் சுமார் ரூ.51 லட்சம்) ஆகும். ஆனால், 2024 ஏப்ரல் மாதத்தில் அநாதின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டது. அவருக்கு ஆண்டுக்கு $75,000 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.64 லட்சம்) சம்பளத்துடன் ஒரு புதிய வேலைவாய்ப்பு கிடைத்தது.
ஆனால், விசா பிரச்சனை மற்றும் மன அழுத்தம் காரணமாக இந்தியாவுக்கு திரும்ப முடிவெடுத்தார். பிறகு, அவர் வேலை செய்த நிறுவனம், அவருக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கியது. அதன்படி, 2024 அக்டோபர் மாதம் முதல், அநாத் இந்தியாவில் இருந்தபடியே வேலை செய்து வருகிறார். தற்போது அவர் ஆண்டுக்கு ரூ.40 லட்சம், அதாவது மாதம் ரூ.2.67 லட்சம் (வரி கழித்த பிறகு) சம்பாதித்து வருகிறார்.
மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், அநாதின் வாழ்க்கை மிகப் பொதுவானது என்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறார். அவர் தற்போது தனது பெற்றோருடன் சௌத் மும்பையில் தங்கியிருப்பதால் வாடகை, மளிகைச் செலவுகள், மின்சாரம், குடிநீர் போன்ற தேவை இல்லாமல் இருக்கிறார். இதனால், அவரது பெரும் செலவுகள் குறைந்துவிட்டன.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், "நான் ஒளிரும் லைஃஸ்டைல் நடத்தவில்லை. எனது மாத வருமானத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை SIP-களில் (Systematic Investment Plans) முதலீடு செய்கிறேன். மீதம் இருக்கும் தொகையை மட்டும் தான் தனிப்பட்ட செலவுகளுக்கு பயன்படுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த வாழ்க்கைமுறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் என்ன என்பதையும் அவர் விரைவில் ஒரு புதிய வீடியோவில் பகிர திட்டமிட்டுள்ளார்.
அநாத் ஒருபுறம் பெரும் சம்பளம், நிதி ஒழுங்கு, வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவற்றைக் கொண்டு வாழ்க்கையை நன்கு கட்டுப்படுத்தி வருகிறார் என்றாலும் மனஅழுத்தம், தனிமை, சுயஇடையூறுகள் போன்ற உண்மையான சவால்களும் இருப்பதாக அவர் ஒப்புக்கொள்கிறார். அவரது அடுத்த வீடியோ, இளம் தொழில்முனைவோர்கள் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு வழிகாட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications