இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட தங்க நகை கடன் சந்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்து 14.19 லட்சம் கோடியை எட்டும் என PWC இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டை பொருத்தவரை ஒழுங்கமைக்கப்பட்ட தங்க நகை கடன் சந்தை கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது இதன் மொத்த மதிப்பு 7.1 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது.
அடுத்த ஐந்தாண்டுகளில் இது இரு மடங்காக அதிகரிக்கும் என PWC இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. Striking gold: The rise of India's gold loan market என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2029 ஆம் நிதி ஆண்டில் இந்தியாவில் தங்க நகை கடன் சந்தை 14.19 லட்சம் கோடியாக அதிகரிக்கும், அதாவது ஆண்டுக்கு 14.85% என்ற வகையில் இதன் வளர்ச்சி இருக்கும் என கூறியுள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இந்திய குடும்பங்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக 25 ஆயிரம் டன் நகைகளை கையிருப்பாக வைத்துள்ளன எனக் கூறுகிறது. இந்திய குடும்பங்களிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 126 லட்சம் கோடி என சொல்லப்படுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கடன் சந்தையில் தங்க நகை கடனுக்கான டிமாண்ட் என்பது அதிகமாக இருக்கிறது என்றும் தங்கத்தின் மீதான கடன்களின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்றும் கூறுகிறது. தங்கத்தின் மீது கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு ஒழுங்குமுறை அமைப்புகள் விதிமுறைகளை மிகக் கடுமையாக்கியுள்ளன. அதாவது லோன் டு வேல்யூ மெயின்டனன்ஸ் மற்றும் நகைகளை ஏலம் விடுவது தொடர்பான நடைமுறைகள் ஆகியவற்றை கடுமையாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி இருந்தாலும் இந்தியாவில் தங்க நகை கடன் சந்தை வளர்ச்சி பாதையில் இருக்கிறது என PWC அறிக்கை கூறுகிறது. இருந்தாலும் ரிசர்வ் வங்கி வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் ரொக்கமாக 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்திருப்பதால், மக்கள் ஒழுங்கமைக்கப்படாத நிறுவனங்களிடமிருந்து தங்கத்தை அடகு வைத்து கடன்களை வாங்கும் போக்கு அதிகரிக்கலாம் என்ற கவலையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் டிஜிட்டல் கோல்டு முறையில் தங்க கடன் வழங்கும் போக்கு அதிகரிக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஃபின் டெக் நிறுவனங்கள் கடன் வழங்குநர்களோடு கூட்டாண்மை செய்திருப்பதால் இந்த துறை இன்னும் வளர்ச்சி அடையும் தொழில்நுட்ப ரீதியாக இதில் பல மாற்றங்களை காணலாம் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.
மேலும் தென்னிந்தியாவில் தான் அதிக அளவிலான தங்க கடன்கள் இருப்பதாக கூறுகிறது. மொத்தமாக நாடு முழுவதும் நிலுவையில் இருக்கக்கூடிய தங்கக் கடன்களில் சுமார் 79% தென்னிந்தியாவில் தான் இருக்கிறது என கூறுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications