தென்கொரியாவின் தனியுரிமை கண்காணிப்பு நிறுவனம், மெட்டாவிற்கு 21.6 பில்லியன் வோன் அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்திய மதிப்புக்கு தோரயமாக 127.5 கோடி. இந்த அபராதம், மெட்டா நிறுவனம் தென்கொரியாவில் உள்ள பேஸ்புக் பயனர்களின் சென்சிட்டிவ் தகவல்களை அங்கீகாரமின்றி சேகரித்து விநியோகித்ததற்காக விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் தென்கோரிய அரசு மெட்டாவுக்கு விதித்த தொடர்ச்சியான அபராதங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தனிப்பட்ட தகவல்களை மெட்டா நிறுவனம் எப்படி கையாள்கிறது என்பதை தென்கொரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் உள்ளனர்.
தொடர் விசாரணை: 4 வருட தொடர் விசாரணைக்கு பிறகு தென்கொரியாவின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு ஆணையம் (PIPC) சுமார் 980,000 பேஸ்புக் பயனர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை மெட்டா நிறுவனம் சட்டவிரோதமாக சேகரித்ததை கண்டுபிடித்துள்ளது.

சேகரிக்கப்பட்ட தரவுகளில் பயணர்களின் மதம், அரசியல் சார்ந்த பார்வைகள், ஒரே பாலின உறவுகள் பற்றிய தகவல்களும் அடங்கும். ஜூலை மாதம் 2018-ஆம் ஆண்டு முதல் மார்ச் மாதம் 2022-ஆம் ஆண்டுக்கு இடையில் அங்கீகரிக்கப்படாத டேட்டா சேகரிப்பு நடந்ததாக தகவல் பாதுகாப்பு ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
வினியோகிக்கப்பட்ட பயனர்களின் டேட்டா: மெட்டா நிறுவனம் சேகரிக்கப்பட்ட டேட்டாவை கிட்டத்தட்ட 4000 விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து உள்ளதையும் PIPC கண்டுபிடித்துள்ளது. தென்கொரியாவின் தனி உரிமைச் சட்டம் தனிப்பட்ட நம்பிக்கைகள், அரசியல் பார்வைகள் மற்றும் பாலியல் நடத்தை தொடர்பான தகவல்களை கண்டிப்பாக பாதுகாப்பதாகும். இதை மீறி இது போன்ற தகவல்களை மெட்டா நிறுவனம் பகிர்ந்துள்ளது.
தென் கொரியாவில் உள்ள சட்டம் ஒரு தனிநபரின் வெளிப்படையான அனுமதியின்றி எந்த நிறுவனங்களும் அவர்களுடைய தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தக் கூடாது என்பதுதான். ஃபேஸ்புக் பயனர்கள் தங்கள் விரும்பிய பக்கங்களுக்கு செல்வதற்காக கிளிக் செய்த விளம்பரங்களை ஆய்வு செய்து மெட்டா நிறுவனம் முக்கிய தகவல்களை சேகரித்துள்ளது என்று PIPC தெரிவித்துள்ளது.
மேலும் தனிப்பட்ட நபர்களின் மதம் போன்ற விவரங்களை பயன்படுத்தி விளம்பரங்களை வகைப்படுத்தவும், பயனர்களின் ஆர்வம் என்ன? என்பதை கண்டுபிடிக்கவும் மெட்டா நிறுவனம் இந்த தகவல்களை பயன்படுத்தியதையும் PIPC கண்டுபிடித்துள்ளது.
PIPC-யின் இயக்குனரான லீ யூன் ஜங், மெட்டா நிறுவனம் இந்த முக்கியமான தகவல்களை சேகரித்து தனிப்பட்ட விஷயத்திற்காக பயன்படுத்தியுள்ளது. ஆனால் அவர்களுடைய டேட்டா பாலிசியில் இது குறித்த விவரங்களை தெளிவற்ற முறையில் கொடுத்துள்ளது மற்றும் அதற்கான ஒப்புதலை பெறவில்லை என்றும் லீ கூறியுள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications