இந்தியாவில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஸ்மார்ட் போன் பாகங்களுக்கான உற்பத்தி மையமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்களை ஃபாக்ஸ் கான் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றன. இது தவிர ஸ்மார்ட் ஃபோன்களுக்கு தேவையான பல்வேறு டிஸ்பிலேக்கள், கேமராக்களை உற்பத்தி செய்யும் ஆலைகளும் சென்னை மற்றும் சென்னையில் சுற்றியுள்ள தொழில் பூங்காக்களில் அமைந்துள்ளன .
அண்மையில் கூட பெகட்ரான் நிறுவனம் 5ஜி நெட்வொர்க்குக்கு தேவையான ஸ்மால் செல்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலையை சென்னையில் நிறுவுவதாக அறிவிப்பு வெளியிட்டது. தற்போது தென்கொரிய நிறுவனம் ஒன்று சென்னை ஸ்ரீபெரும்புதூரில் ஸ்மார்ட்போன்களுக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவ இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

Ringke என்ற நிறுவனம் தென்கொரியாவை தலைமையிடமாக கொண்டு ஸ்மார்ட் போன்களுக்கான அடாப்டர் கேபிள்கள், கேஸ்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் முதன்முறையாக தென்கொரியாவுக்கு அடுத்ததாக இந்தியாவில் தமிழ்நாட்டில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. இந்த உற்பத்தி ஆலை என்பது சென்னை அருகே இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர் தொழில் பூங்காவில் அமைக்கப்பட இருக்கிறது.
முதல் கட்டமாக 25 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த மொபைல் போன் ஆக்சஸரீஸ் பாகங்களை உற்பத்தி செய்யும் ஆலைக்கான கட்டுமான பணிகளை தொடங்கி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுமான பணி நிறைவடைந்து ஆலை முழுவதுமாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொபைல் ஃபோன்களுக்கான கேஸ்கள், ஜி ஏ என் அடாப்டர்கள், சார்ஜிங் கேபிள்கள் உள்ளிட்ட பொருட்கள் இதில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ரிங்கே நிறுவனம் இந்த ஆலை மூலம் மத்திய மாநில அரசுகளின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டத்திலும் இணைந்து நிதி உதவி பெற இருக்கிறது.
ஆண்டுக்கு 8 மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக சென்னை ஆலை உருவாக்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இதன் உற்பத்தி திறனை மேலும் பெருக்க முடிவு செய்திருக்கின்றனர். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன.
இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கக்கூடிய இந்த செல்போன் கேஸ்கள் மற்றும் அடாப்டர் கேபிள் உள்ளிட்டவை உள்நாட்டு சந்தை மட்டும் இல்லாமல் அமெரிக்க , ஐரோப்பிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என ரிங்கே நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மேலும் உள்ளூர் இகாமர்ஸ் தளங்களோடு இணைந்து உள்ளூர் விற்பனையை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறது .
இந்தியாவில் மொபைன் போன் ஆக்ஸசரீஸ் சந்தை 10 லிருந்து 12 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டதாக இருக்கிறது. ஆண்டு தோறும் இது 10% என்ற விகிதத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. உலக எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா முன்னிலை நாடாக உருவாகி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் இதில் முதலிடத்தில் இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications