தென்னிந்தியாவின் பவர்.. இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர்..!

தென் இந்தியாவின் ஐந்து மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகியவை கடந்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளது. 1970-71ல் இந்திய பொருளாதாரத்தில் வெறும் 24.6% பங்களிப்பை மட்டுமே கொண்டிருந்த தென் மாநிலங்கள், 2023-24ல் 30.8% ஆக உயர்ந்துள்ளது.

இதுவே வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்கள் வெறும் 31.7% அளவிலான பங்களிப்பை மட்டுமே கொடுத்துள்ளது. '2047 Southern Odyssey: Powering Ahead to a $10-Trillion Economy' என்ற அறிக்கை, 2023-24ல் தென் இந்தியா, இந்திய GDP-யில் 31% பங்களித்ததாக கூறுகிறது.

தென்னிந்தியாவின் பவர்.. இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர்..!

இந்தியாவிலேயே தென் இந்திய மாநிலங்கள் முன்னோடியாக இருந்தாலும், இந்த 5 மாநிலத்திற்குள் எப்போதும் ஒரு ஆரோக்கியமான போட்டியிருப்பதே இந்த அதிரடியான வளர்ச்சிக்கு முக்கியமான காரணமாக விளங்குகிறது. எல்லாம் சரி தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் ஆதிக்க அளவு என்ன..?

GDP வளர்ச்சி-யில் தென் இந்தியா டாப்பு: மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் டாக்டர் வி.அனந்த நாகேஸ்வரன், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய போது, தென் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.3% ஆக உள்ளதாகவும், இது நாட்டின் மற்ற பகுதிகளின் சாரசரி 5% வளர்ச்சியை விட அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் வருடாந்திர அடிப்படையில் 5% வளர்ச்சியடைந்துள்ளது, இது இந்தியாவின் மற்ற பகுதிகளின் 4.2% வளர்ச்சியை விட அதிகம் என்று புள்ளி விபரங்களை அடுக்கியுள்ளார். இதைவிட முக்கியமாக வேலைவாய்ப்பு சந்தையில் தென்னிந்தியாவில் பணியாளர் பங்கேற்பு விகிதமும் தேசிய சராசரியை விட தென் இந்தியாவில் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் பவர்.. இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர்..!

2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கிய மாநிலத்தின் தனிநபர் வருமானம் மற்றும் அதன் வளர்ச்சி அளவுகள்.

தமிழ்நாடு ஆதிக்கம்: தென் இந்திய உற்பத்தி GDP-யில் தமிழ்நாடு 20.4% பங்களிக்கிறது, மேலும் இந்திய GDP-யில் தமிழ்நாடு 8.9% பங்களிப்பை 2023-24ல் பதிவு செய்துள்ளது. இது 1970-71ல் 7.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வாகன உற்பத்தி, டெக்ஸ்டைல், மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இதுவே மாநிலத்தின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்ககு முக்கியமானதாக உள்ளது.

ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானாவின் GDP பங்களிப்பு 9.7% ஆக உயர்ந்துள்ளது, இது 1970-71ல் 7.7% ஆக இருந்தது. மறுபுறம், உத்தர பிரதேசத்தின் GDP பங்கு 13% இலிருந்து 9.5% ஆகவும், பீகார் மற்றும் ஜார்க்கண்டின் பங்கு 6.9% இலிருந்து 4.3% ஆகவும் 1970-71 டூ 2023-24 மத்தியில் குறைந்துள்ளது.

பெண்களின் பங்கு: இன்றைய வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வேலைவாய்ப்பு சந்தையில் பெண்களின் பங்கீடு மிகவும் அவசியமாக உள்ளது. அந்த வகையில் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள், இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 50% பெண்கள் வேலைவாய்ப்பு சந்தையில் பங்கேற்றுள்ளனர் என்பது இந்த மாநிலத்திற்கு தனி பெருமை.

மக்கள்தொகை சரிவு: பொதுவாக பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் தொகைக்கும் பெரிய தொடர்பு உள்ளது. அந்த வகையில் தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைந்தும் GDP வளர்ச்சி அடைந்து நாட்டின் மொத்த பொருளாதாரத்தில் தென்னிந்தியாவில் பங்கீடும் அதிகரித்துள்ளது.

1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தென் மாநிலங்களின் மக்கள்தொகை இந்தியாவில் 24% ஆக இருந்தது, ஆனால் 2023ல் இது 19.7% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில், வட இந்திய மாநிலங்களின் மக்கள்தொகை அதிகரித்துள்ளது. மக்கள்தொகை குறைந்த போதிலும், தென் மாநிலங்கள் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது, அவற்றின் உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் வலிமையை காட்டுகிறது.

இறுதியாக தென்னிந்திய பொருளாசாகத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முன்னணி இடங்களை பிடித்துள்ளன, அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம், கேரளா அகியவை உள்ளன. 2047 ஆம் ஆண்டுக்குள் தென் இந்தியாவை $10 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கான வாய்ப்புகளையும், திட்டங்களையும் இந்த '2047 Southern Odyssey: Powering Ahead to a $10-Trillion Economy' என்ற அறிக்கை முன்வைக்கிறது.

தென் இந்தியாவின் பொருளாதார வலிமை: தென் இந்திய மாநிலங்கள், உயர்ந்த GDP வளர்ச்சி, தனிநபர் வருமான உயர்வு, மற்றும் பெண்களின் பணியில் பங்கேற்பு ஆகியவற்றால் முன்னணியில் உள்ளன. தமிழ்நாடு, வாகன உற்பத்தி மற்றும் மின்னணு துறைகளில் முதலிடம் வகிக்கிறது, அதே நேரத்தில் கர்நாடகா IT மற்றும் பயோடெக் துறையிலும் முன்னிலை வகிக்கிறது. ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா விவசாயம் மற்றும் சேவைத் துறைகளில் முன்னேறி வருகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+