சென்னை: தென்னிந்தியாவில் இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள் குறித்து ஒரு கலக்கல் செய்தி இப்போது வெளியாகியுள்ளது.
உலகில் மிகப் பெரிய ரயில்வே உட்கட்டமைப்பைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களும் ரயில்களால் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பல காரணங்களால் ரயில்களில் பயணிப்பதையே பொதுமக்கள் விரும்புகிறார்கள்.

இதற்கிடையே ரயிவே துறையை நவீனமயமாக்கும் முயற்சியாக இந்திய ரயில்வே வந்தே பாரத் ரயில்களை சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது.இப்போது நமது நாட்டில் சுமார் 30 ரூட்களில் வந்தே பாரத் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத்: வடமாநிலங்களில் சில ரூட்களில் வந்தே பாரத் ரயில்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றும் சில ரயில்களில் பல சீட்கள் காலியாகவே உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.
இந்திய ரயில்வேயின் நவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. மார்டன் டிசைன், முழுமையாக ஏசி, தானியங்கி கதவுகள் என்று வந்தே பாரத்தில் இருக்கும் வசதிகள் இளைஞர்கள் மற்றும் தொழில் துறையினர் இது வெகுவாக ஈர்த்துள்ளது. செல்ல வேண்டிய இடத்திற்கு மற்ற ரயில்களைக் காட்டிலும் வேகமாக வந்தே பாரத் ரயில்கள் மூலம் சென்றடைய முடிவதால் இதற்கான ஆதரவு தென்னிந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது.
5 ரூட்கள்: இப்போது தெற்கு மத்திய ரயில்வே (SCR) வரம்பில் மொத்தம் 5 ரயில்கள் இயக்கப்படுகிறது. செகந்திராபாத் - விசாகப்பட்டினம், செகந்திராபாத் - திருப்பதி; திருப்பதி - செகந்திராபாத்; ஹைதராபாத் - பெங்களூர், விஜயவாடா - சென்னை என மொத்தம் 5 ரூட்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில்கள் தொடக்கம் முதலே ஆதரவு அதிகமாக இருக்கும் நிலையில், 5 ரயில்களிலும் டிக்கெட்கள் முழுமையாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இதனால் 100 % பயணிகள் உடன் தான் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது.
இளைஞர்கள் ஆதரவு அதிகம்: இந்த ரயில்களுக்கு இளைஞர்கள் மத்தியில் தான் ஆதரவு அதிகமாக இருந்துள்ளது. இந்த வந்த பாரத் ரயில்களில் பயணிப்போரில் சுமார் 29.08% பேர் 25-34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. மேலும், 26.85% பேர் 35-49 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர்.. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சுமார் 56% பேர் இளைஞர்கள் மற்றும் வேலை செய்யும் இளைஞர்களாக உள்ளனர்.
இது குறித்து தெற்கு மத்திய ரயில்வே-இன் பொது மேலாளர் அருண் குமார் ஜெயின் கூறுகையில், "இந்த ரயில்கள் இயக்கப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 7.16 லட்சம் பயணிகள் இந்த ஐந்து வந்தே பாரத் ரயில்களில் பயணித்துள்ளனர். பயண அனுபவத்தை மேம்படுத்த ரயில்வே எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே பாசிட்டிவ் வரவேற்பு கிடைப்பதையே இது காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.
சென்னை கோவை வந்தே பாரத்: அதேபோல தமிழ்நாட்டில் சென்னை கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் அக்டோபர் 25ஆம் தேதியுடன் 200 நாட்களை நிறைவு செய்தது. இந்த சென்னை கோவை வந்தே பாரத் ரயில்கள் இந்த 200 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் ரயில்களுக்கும் கூட மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications