இந்தியாவில் ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) நிறுவனம், தனது அரட்டை செயலி மூலம் சமூக வலைதளங்களில் ஒரு புதிய அலையை உருவாக்கியுள்ளது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த செயலி, உலகளாவிய மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப்புக்கு மாற்றாக பார்க்கப்படுகிறது. இந்த அரட்டை செயலியை தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு உருவாக்கியுள்ளார்.
மற்ற செயலிகளில் இல்லாத, பயனரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல அம்சங்கள் அரட்டை செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வருங்காலத்தில் வாட்ஸ்அப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு இது ஒரு கடுமையான சவால் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளவுட் அடிப்படையிலான வணிகச் செயலிகள் மற்றும் மென்பொருள் தொகுப்புகளை வழங்கி, உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய தொழில்நுட்ப துறையில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற சேவை சார்ந்த நிறுவனங்களாக இல்லாமல் கூகுள், மைக்ரோசாஃப்ட் போல தயாரிப்பு சார்ந்த நிறுவனங்களில் ஸோஹோ ஒரு முன்னோடியாக திகழ்கிறது.
இந்நிலையில் தான், ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தனது பயனர்களின் ரகசிய தகவல்களை அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருந்து எந்த அளவுக்குப் பாதுகாக்க முடியும் என்ற கேள்விக்கு ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விளக்கம் அளித்துள்ளார்.
The Secret Rebel Case குறித்து பேசிய அவர், எந்தவொரு நிறுவனமும் தங்கள் பயனர்கள் அரசாங்கத்திற்கு எதிராக செய்யும் சதித்திட்டங்களை பாதுகாக்க முடியும் என்று உறுதியளிப்பது தவறான வாக்குறுதி. ஒரு நாட்டில் செயல்படும்போது, எளிமையான நிறுவனங்களை விட, சுதந்திரமான இறையாண்மை அதிகாரம் எப்போதும் மேலோங்கி நிற்கும்.
எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் நிச்சயம் கட்டுப்பட வேண்டும். கூகுள் இந்தியாவில் செயல்படும்போது இந்திய சட்டங்களுக்கும், ஆப்பிள் சீனாவில் செயல்படும்போது சீன சட்டங்களுக்கும் கட்டுப்படுவது போல, ஜோஹோ எந்த நாட்டில் இயங்குகிறதோ அந்த நாட்டின் சட்டங்களை கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
சட்டரீதியான பாதுகாப்புக்கு வரம்புகள் இருந்தாலும், ஜோஹோ தொழில்நுட்ப ரீதியாக பாதுகாப்பை வழங்குவதை மறைமுகமாக உணர்த்தியுள்ளது. இந்நிறுவனம் பயனர்களின் தரவுகளை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. எனவே, சட்டரீதியாக அரசாங்கமே கேட்டாலும், அந்த தரவை படிக்க முடியாதவாறு செய்யலாம். இது சட்டரீதியான பாதுகாப்பை வழங்காவிட்டாலும், தரவு மீறப்படுவதற்கான வாய்ப்புகளை தொழில்நுட்பரீதியாக குறைக்கிறது.
தற்போது இந்தியாவில் பிரபலமாக இருக்கும் மெசேஜிங் தளங்களில் இருந்து பயனர்கள் தங்கள் உரையாடல்களின் ரகசியத்தன்மை குறித்து அதிக கவலை கொண்டிருக்கின்றனர். ஆனால், ஜோஹோவில் அந்த பிரச்சனைகள் இருக்காது. ஜோஹோ நிச்சயம் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications