விஸ்வரூபம் எடுத்த "ஸ்டார்லிங்க்": 1 லட்சம் வாடிக்கையாளர்கள், 14 நாடுகளில் சேவை..!

உலகின் மிகப்பெரிய தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ன் செயற்கைகோள் வாயிலான இண்டர்நெட் சேவை திட்டம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வேகமாகவும் மிகப்பெரிய அளவிலும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க்-ன் கனவுத் திட்டமான ஸ்டார்லிங்க் சேவை உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இயங்கி வரும் நிலையில், சக போட்டி நிறுவனங்கள் சேவையைத் துவங்கும் முன்பே இப்பிரிவு சேவையில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது தான் எலான் மஸ்க்-ன் திட்டம்.

ஸ்டார்லிங்க் திட்டம்

ஸ்டார்லிங்க் திட்டம்

ஸ்டார்லிங்க் திட்டம் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் செயற்கைக்கோள் உடன் நேரடி தொடர்பில் இயங்கும் ஒரு அதிவேக பிராண்ட்பேன்ட் சேவை வழங்குவது தான். இந்த ஸ்டார்லிங்க் சேவை மூலம் எவ்விதமான கேபிள் இணைப்பும் இல்லாமல் காடு, மலை என அனைத்து பகுதிகளிலும் அதிவேக இண்டர்நெட் சேவை பெற முடியும் என்பது தான் இத்திட்டத்தின் சிறப்பு.

மலை கிராமங்கள்

மலை கிராமங்கள்

உதாரணமாகத் தமிழ்நாட்டில் பல மலை கிராமங்களில் மொபைல் நெட்வொர்க்-ஏ குறைவாகத் தான் இருக்கும், அங்கு எப்படி அதிகவேக இணடர்நெட் சேவை பெற முடியும். பிஎஸ்என்எல் போன்ற பிராண்ட்பேன்ட் சேவை பெற்றாலும் வேகம் என்பது குறைவாகவே இருக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஒரு சேவை தான் ஸ்டார்லிங்க். இந்த ஸ்டார்லிங்க் சேவை மூலம் சென்னையில் கிடைக்கும் இண்டர்நெட் வேகத்தில் மலை கிராமங்களிலும் கிடைக்கும்.

உலகம் முழுவதும் ஓரே நிறுவனம்

உலகம் முழுவதும் ஓரே நிறுவனம்

இத்தகைய முக்கியமான சேவை பிரிவில் அமெரிக்காவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனியொரு நிறுவனமாக ஆதிக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. எலான் மஸ்க் இதைக் குறிவைத்துத் தான் உலகம் முழுவதும் இண்டர்நெட் சேவை அளிக்கும் ஸ்டார்லிங்க் சேவையை விரிவாக்கம் செய்து வருகிறார்.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் தலைமை வகிக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் கீழ் தான் இந்த ஸ்டார்லிங்க் சேவை உள்ளது. ஒவ்வொரு மாதமும் பல செயற்கைகோள்களை இந்த ஸ்டாரிலிங்க் சேவைக்காக விண்ணில் செலுத்தி வருகிறது.

1,700 செயற்கைக்கோள்கள்

1,700 செயற்கைக்கோள்கள்

இதன் படி ஸ்டார்லிங்க் சேவைக்காகத் தற்போது சுமார் 1,700 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது, விரைவில் தனது 42,000 செயற்கைகோள்கள் இலக்கை அடைய உள்ளது.

ஸ்டார்லிங்க் ரெட்மினல்

ஸ்டார்லிங்க் ரெட்மினல்

மேலும் ஸ்டார்லிங்க் சேவைக்காகப் பயன்படுத்தும் ரெட்மினல் அதாவது டிஷ் மற்றும் மோடம் கருவிகளை இதுவரை 1 லட்சம் பேருக்கு டெலிவரி செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க். 1 லட்சம் டெர்மினல் என்றால் 1 லட்சம் வாடிக்கையாளர்கள்.

14 நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை

14 நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை

இந்த 1 லட்சம் வாடிக்கையாளர்கள் மூலம் சுமார் 14 நாடுகளில் இச்சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் இண்டர்நெட் சேவை இல்லாத பகுதிகளை எல்லை வித்தியாசம் இல்லாமல் இணைத்துள்ளார் எலான் மஸ்க்.

14 நாடுகள்

14 நாடுகள்

இந்த ஸ்டார்லிங்க் சேவை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா, நெதர்லாந்து, அயர்லாந்து, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 14 நாடுகளில் இயங்கி வருகிறது.

 இந்தியாவில் எப்போது

இந்தியாவில் எப்போது

இதுமட்டும் அல்லாமல் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்தியா உட்படப் பல நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவை அளிக்க அரசிடம் விண்ணப்பம் கொடுத்துள்ளது. ஒப்புதல் கிடைத்த உடனே இன்னும் பல நாடுகளுக்குத் தனது சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

150 MBPS வேகம்

150 MBPS வேகம்

தற்போது அமெரிக்காவில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிலையாகக் குறைந்தபட்சம் 150 MBPS வேகத்தில் ஸ்டார்லிங்க் சேவை மூலம் இணடர்நெட் சேவை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதர நாடுகளிலும் புதிதாக உருவாக்கியுள்ள Better Than Nothing Beta திட்டம் மேம்படுத்த உள்ளது ஸ்பேஸ்எக்ஸ்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+