உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு இன்னும் சில நாட்களில் கோடி கோடியாக பணம் வந்து கொட்ட போகிறது. எலான் மஸ்கிற்கு சொந்தமான விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) பங்குச்சந்தையில் தனது ஐபிஓ (IPO - Initial Public Offering) வெளியிட தயாராகி வருகிறது.
உலக அளவில் முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கும் ஒரு ஐபிஓ-ஆகவும் அதிக மதிப்பு கொண்ட ஒரு ஐபிஓ-ஆகவும் ஸ்பேஸ் எக்ஸ் ஐபிஓ இருக்கிறது., இதற்கு உலகளவில் முதலீட்டாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. SpaceX-ன் ஐபிஓ பங்குகள் ஜூன் 11 அன்று விலை நிர்ணயம் செய்யப்பட்டு ஜூன் 12 அன்று அமெரிக்க பங்குச்சந்தையில் முறைப்படி வர்த்தகத்தை தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளவில் விண்வெளி தொழில்நுட்பத்தில் வெற்றிகரமாக இயங்கும் ஒரு நிறுவனம் தான் ஸ்பேஸ் எக்ஸ். விண்வெளி தொழில்நுட்பத்தில் நவீனங்களை புகுத்தி தொடர்ந்து வெற்றிகரமாக திகழ்கிறது. வருங்காலங்களில் பல நவீன திட்டங்களையும் தீட்டியுள்ளது. இதனால் இந்நிறுவன வளர்ச்சியும் லாபமும் பிரம்மாண்டமாக இருக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். இதனால் இந்த ஐபிஓ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எலாஸ் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மொத்தம் 55.56 கோடி பங்குகளை, ஒரு பங்கின் விலை 135 அமெரிக்க டாலர் என்ற வீதத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 75 பில்லியன் டாலர் நிதியைத் திரட்டவும், நிறுவனத்தின் மொத்த மதிப்பை 1.8 டிரில்லியன் டாலராக உயர்த்தவும் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இது பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒரு மதிப்பீடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு சவுதி அரம்கோ நிறுவனம் 29.4 பில்லியன் டாலர் திரட்டி படைத்த சாதனையை ஸ்பேஸ் எக்ஸ் முறியடிக்க வாய்ப்புள்ளது.
நிறுவன முதலீட்டாளர்கள் ஏற்கனவே 10 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகைக்கு பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஐபிஓ-வில் சுமார் 30% பங்குகள் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சில்லறை முதலீட்டாளர்கள் சில தளங்கள் வழியாக புதன்கிழமைக்குள்ளாகவே விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் ஏவுதல், செயற்கைக்கோள், விண்வெளி என வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது. 2025இல் நிறுவனத்தின் வருவாய் 33% அதிகரித்து 18.6 பில்லியன் டாலராக இருந்தது. இருந்தாலும் நிறுவனத்தின் செயல்பாட்டு நஷ்டம் 2025ஆம் ஆண்டில் 4.9 பில்லியன் டாலராக இருந்தது. மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாய் சரிந்து, நஷ்டம் 1.9 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் நிறுவனத்திற்கு 60 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடன்களும் பொறுப்புகளும் உள்ளன. எலான் மஸ்க் எப்படியும் ஸ்பேஸ் எக்ஸை நிலை நிறுத்திவிடுவார் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

