பணமழையில் எலான் மஸ்க்!! உலகின் முதல் டிரில்லினியர்.. இவரோட பணத்தை வைக்க எத்தனை வீடு வேணும் தெரியுமா?

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவன ஐபிஓ வெளியீட்டின் மூலம் உலகிலேயே அதிக பணம் கொண்ட தனிநபராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். உலகின் முதல் டிரில்லினியர் என்ற சாதனையும் எலாம் மஸ்க் படைத்துள்ளார்.

எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், ஸ்டார் லிங்க் என உலகின் முன்னணி டெக் நிறுவனங்களை உருவாக்கியவர். தன்னுடைய திறமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உலகின் அசைக்க முடியாத நபராக உருவெடுத்துள்ளார். எலான் மஸ்இன் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது. முதன் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டன. முதல் நாளிலேயே ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் 23% வரை மளமளவென உயர்ந்ததால், எலான் மஸ்க் உலகின் முதல் 'டிரில்லியனர்' (Trillionaire - சுமார் 90 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடையவர்) என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

பணமழையில் எலான் மஸ்க்!! உலகின் முதல் டிரில்லினியர்.. இவரோட பணத்தை வைக்க எத்தனை வீடு வேணும் தெரியுமா?

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் நாஸ்டாக் (Nasdaq) பங்குச்சந்தையில் "SPCX" என்ற குறியீட்டுடன் களம் இறங்கியது. தொடக்க விலையான $150-ல் இருந்து 23% உயர்ந்து $166.90 வரை சென்றது. இதன் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பு $2.18 டிரில்லியனாக (இந்திய மதிப்பில் சுமார் 180 லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.

இந்த அசுர வளர்ச்சியால், ஃபோர்ப்ஸ் இதழின் கணிப்புப்படி எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு $1.1 டிரில்லியனைத் தொட்டுள்ளது. இதன் மூலம் மனித வரலாற்றிலேயே அதிகாரப்பூர்வமாக ஒரு டிரில்லியன் டாலர் சொத்து சேர்த்த முதல் நபராக அவர் மாறியுள்ளார். எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர் ஆனால் இது அவர் கையில் ரொக்கமாக இல்லை. இவை டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பங்குகளாகவே உள்ளன. அவரே நினைத்தாலும் இந்த பணத்தை கையில் எடுக்க முடியாது.

பணமழையில் எலான் மஸ்க்!! உலகின் முதல் டிரில்லினியர்.. இவரோட பணத்தை வைக்க எத்தனை வீடு வேணும் தெரியுமா?

ஒரு வேளை அவர் எடுத்தால் எலான் மஸ்கின் இந்த பணத்தை வீடுகளில் சேமிக்க நினைத்தால் கூட 1000 சதுர அடி கொண்ட 5000க்கும் அதிகமான வீடுகள் தேவையாம். ஒரு அமெரிக்க டாலர் நோட்டு ஒவ்வொரு அறையிலும் 8 அடி உயரம் வரை நிரப்பினால் கூட 5000க்கும் அதிகமான வீடுகள் இருந்தால் இந்த பணத்தையே அடுக்க முடியுமாம்.

Also Read

பங்குச்சந்தைக்கு வருவதற்கு முன்னதாக, முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைத் திரட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்தது. இதன் மூலம் $75 பில்லியன் டாலர் (சுமார் ₹6.2 லட்சம் கோடி) நிதி திரட்டப்பட்டது. இதற்கு முன்பு 2019-ல் சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனம் செய்திருந்த உலக சாதனையை ஸ்பேஸ்எக்ஸ் ஐபிஓ தற்போது முறியடித்துள்ளது.

விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் டேட்டா சென்டர்களை அமைப்பதற்கும், செவ்வாய் கிரகத்தில் (Mars) மனிதக் குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குப் பில்லியன் கணக்கில் கூடுதல் நிதி தேவைப்படுகிறது. "விண்வெளிப் பயணங்களை விண்வெளி வீரர்களுக்கு மட்டுமின்றி, உங்களைப் போன்ற சாமானிய மனிதர்களுக்கும் சாத்தியமாக்குவதே எங்கள் இலக்கு" என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

Recommended For You

இதற்கிடையே மார்னிங்ஸ்டார் போன்ற சில சந்தை ஆராய்ச்சி நிறுவனங்கள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படாததால், இந்த பங்கின் விலை அதன் உண்மையான மதிப்பை விட இருமடங்கு அதிகமாக (Overvalued) இருப்பதாகக் எச்சரிக்கின்றனர்.

இருந்தாலும், டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடந்த 2010 முதல் இதுவரை 20,000% லாபத்தை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளதால், எலான் மஸ்க்கின் மீதான நம்பிக்கை காரணமாக முதலீட்டாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+