ஊழியர்கள் நலனில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் இதேவேளையில் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், அவர்களுக்குப் போதமான வசதிகள் அனைத்தும் கிடைக்கிறதா என்பதை அரசாங்கம் எந்த அளவிற்குக் கூர்ந்து கவனிக்கிறது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவே தற்போது உலகம் முழுவதும் ஊழியர்களுக்கு வொர்க் லைப் பேலென்ஸ் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பதற்காக வாரத்தில் 4 நாள் மட்டுமே வேலை என்ற திட்டத்தைப் பல நிறுவனங்கள் முயன்று வருகிறது.
இந்தத் திட்டத்தை மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கும் ஐரோப்பிய நாடுகள், அரசே இதைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியனில் முக்கியப் பொருளாதார நாடாக இருக்கும் ஸ்பெயின் அரசு வெள்ளிக்கிழமை அந்நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வாரத்தில் 4 நாள் வேலை திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்ய ஒரு சோதனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
குறைவான வார வேலைநாட்கள்
இத்திட்டத்தில் ஊழியர்களுக்குக் குறைவான வார வேலைநாட்களில் பணியாற்றினாலும் சம்பள இழப்பு இல்லாமல், உற்பத்தித் திறனில் பாதிப்பு இல்லாமல் இத்திட்டத்தைச் செயல்படுத்த முடியுமா என்று சோதிக்க உள்ளது. இந்த முன்னோடித் திட்டத்தில் வெற்றி அடைந்தால் அதை நாடு முழுவதும் அமலாக்கம் செய்யும் திட்டத்தில் ஸ்பெயின் அரசு இறங்கும்.
இரண்டு ஆண்டுகள்
தொழிலாளர் சீர்திருத்தங்களை எதிர்நோக்கும் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நிறுவனத்தின் அனைத்து மட்டத்திலும் சோதிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் மூலம் நிறுவனத்தின் செயல் திறனை பெரிய அளவில் அதிகரிக்க முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
ஸ்பெயின் அரசு
இதனாலேயே ஸ்பெயின் அரசின் இந்தப் பைலட் திட்டத்தில் முடிவுகளைக் காண உலகின் அனைத்து நாடுகளும் ஆர்வமாக உள்ளது. மேலும் ஸ்பெயின் அரசின் இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் வாராந்திர பணி நேரத்தைக் குறைக்க வேண்டும்.
உதவி தொகை
இத்திட்டத்தில் சேரும் நிறுவனங்களுக்கு ஸ்பெயின் அரசு அவர்கள் உற்பத்தியில் ஏற்படும் பாதிப்பு மற்றும் கூடுதல் நிர்வாகச் செலவுகளை ஈடுசெய்ய உதவி தொகையைப் பெறுவார்கள் என்று அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நிறுவனங்கள்
கடந்த சில ஆண்டுகளில் பல பெரிய ஸ்பெயின் நிறுவனங்கள் - டெலிஃபோனிகா மற்றும் ஃபேஷன் குழுவான டெசிகுவல் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளது.
சம்பள குறைப்பு
இதேநேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 4 நாள் வேலை திட்டத்தை ஏற்றுக்கொண்ட பல நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளது, இதுபோன்ற சம்பள குறைப்புப் பிரச்சனை தொழிலாளர் யூனியன் அமைப்புகளைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பெறும் பிரச்சனையாக மாறும்.
வொர்க் லைப் பேலென்ஸ்
சம்பள குறைப்பு இல்லாமல் வாரத்தில் 4 நாள் வேலை அதாவது நீட்டிக்கப்பட்ட பணி நேரம் 5 நாள் வேலைத் திட்டத்தை ஈடுசெய்யும், இத்தகைய திட்டத்தை ஒரு அரசு நாடு முழுவதும் கட்டாயம் நடைமுறையின் கீழ் செயல்படுத்துவது மூலம் ஊழியர்களின் வொர்க் லைப் பேலென்ஸ் சிறப்பாக இருக்கும்
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications