இந்திய டெலிகாம் நிறுவனங்கள் நீண்ட காலமாகக் காத்திருந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்துவிட்ட நிலையில், ஏற்கவை கணித்தது பெரும் போல் பெருமளவிலான அலைக்கற்றை விற்பனை ஆகாமல் போனது.
ஆனால் விற்பனை செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரத்திற்குக் கணித்ததை விடவும் அதிகமான விலை கிடைத்த காரணத்தால் மத்திய அரசுக்கும் லாபம்.
மேலும் அலைக்கற்றைக் கைப்பற்றுவதில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவிய காரணத்தால் ஸ்பெக்ட்ரம் அதிக விலைக்குக் கைப்பற்றியது.
மேலும் ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியிலான வர்த்தகப் போட்டி இந்த ஏலத்திற்குப் பெரிய அளவில் உதவியது.
கட்டண உயர்வு நிச்சயம் இருக்கும்
தற்போது டெலிகாம் நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து அலைக்கற்றைகளை வாங்கிய நிலையில் டெலிகாம் நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதி சுமை ஏற்பட்டு உள்ளது. இந்த நிதி சுமையை வாடிக்கையாளர்கள் மீது விதிக்கும் டெலிகாம் கட்டணங்கள் வாயிலாகவே இதை ஈடு செய்யும். இதனால் அடுத்தச் சில வாரங்கள் அல்லது ஒரு மாத இடைவெளியில் டெலிகாம் கட்டணங்கள் உயரும் என்ற கணிப்புகள் நிலவுகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ 57,123 கோடி ரூபாய் முதலீடு செய்து 488.35 Mhz அலைக்கற்றையைக் கைப்பற்றியுள்ளது. இதேபோல் ஜியோவின் சக போட்டி நிறுவனமான பார்தி ஏர்டெல் 18,699 கோடி ரூபாய் முதலீடு தெய்து 355.45 Mhz அலைக்கற்றையைக் கைப்பற்றியுள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனம்
வோடாபோன் ஐடியா நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு இணையாக முதலீடு செய்து அலைக்கற்றையைக் கைப்பற்ற வேண்டும் எனத் திட்டமிட்ட போதிலும் நிதி சுமை அதிக இருந்த காரணத்தாலும், ஏர்டெல் - ஜியோ நிறுவனத்திற்கு இணையாகப் போட்டிப்போட முடியாத காரணத்தாலும் வெறும் 1993 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு செய்து 11.80 Mhz அலைக்கற்றையைக் கைப்பற்றியுள்ளது.
டெலிகாம் சேவையின் தரம்
இதேபோல் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவைக்கு மாற இது மிகவும் சிறப்பான காலகட்டமாக உள்ளது. அனைத்து ஜியோ, ஏர்டெல், வீ ஆகிய 3 தனியார் நிறுவனங்களும் 4ஜி பெரிய அளவில் விரிவாக்கவும், 5ஜி சேவை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் டெலிகாம் சேவையின் தரம் பெரிய அளவில் உதவு உள்ளது.


Click it and Unblock the Notifications