ஐடி மற்றும் டிஜிட்டல் புரட்சியின் அசுர வளர்ச்சிக்கு மத்தியிலும், இந்திய அஞ்சல் துறையின் சேவைகள் பொதுமக்களுக்கு இன்றியமையாத தேவையாகவே இருந்து வருகின்றன. குறிப்பாக, அஞ்சலகங்களில் வழங்கப்படும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சாமானிய மக்கள் இன்றும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம், அஞ்சலக முதலீடுகள் அரசு உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடு என்பதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அசைக்க முடியாத நம்பிக்கையே ஆகும். தகவல் பரிமாற்றங்கள், ஸ்பீடு போஸ்ட் தபால் சேவை மட்டுமல்லாமல், சேமிப்பு மற்றும் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்கள் என பல்வேறு அத்தியாவசிய சேவைகளை அஞ்சலகங்கள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

இந்த சூழலில் தான், இந்திய அஞ்சல் துறை தனது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, பதிவுத் தபால் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு, செப்.1ஆம் தேதி முதல் ஸ்பீடு போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்பு காரணமாக ஸ்பீடு போஸ்ட் கட்டணங்கள் உயரலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் புதிய கட்டண முறையை அறிவித்துள்ளது.
இந்த கட்டண மாற்றம் அக்டோபர் 1அம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அஞ்சல் சேவையின் பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் நோக்கில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, உள்ளூர் சேவைக்கான ஸ்பீடு போஸ்ட் கட்டணம் 50 கிராம் வரை ரூ.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் முதல் 250 கிராம் வரையிலான பார்சல்களுக்கு ரூ.24-ம், 250 கிராம் முதல் 500 கிராம் வரையிலான பார்சல்களுக்கு ரூ.28 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தூர அடிப்படையிலான சேவைகளில், 50 கிராம் வரையிலான ஸ்பீடு போஸ்ட் கட்டணம் 200 கி.மீ மற்றும் 2,000 கி.மீ வரை ரூ.47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 கிராம் முதல் 250 கிராம் வரையிலான பார்சல்களுக்கு, 200 கி.மீ வரம்புக்குள் ரூ.59-ம், 2,000 கி.மீட்டருக்கு மேல் ரூ.77 எனவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பொதுவான ஸ்பீடு போஸ்ட் கட்டணங்களும் ரூ.70 இல் இருந்து ரூ.93 வரை, மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போது உள்ளூர் அஞ்சலக சேவை கட்டணங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், அஞ்சல் துறை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் சில சலுகைகளையும் அறிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி, ஸ்பீடு போஸ்ட் கட்டணங்களில் அவர்களுக்கு 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல, மொத்தமாகப் பார்சல்களை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு 5% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதேபோல், பதிவு தபால் சேவை நீக்கப்பட்டாலும், 'பதிவுச் சேவை' தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு ஸ்பீடு போஸ்ட்டுக்கு குறைந்தபட்சம் ரூ.5 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவை மூலம் பார்சல்கள் அனுப்புனரின் முகவரிக்கு நேரடியாக கொண்டு சென்று டெலிவரி செய்யப்படும்.
மேலும், பார்சல் சேவைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓடிபி அடிப்படையிலான பாதுகாப்பான டெலிவரி, ஆன்லைன் கட்டண வசதி, டெலிவரி குறித்த எஸ்.எம்.எஸ். அறிவிப்புகள், டெலிவரி நிலை குறித்த தகவல்கள் போன்ற கூடுதல் சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications