வீடு வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவு. ஆனால் ஒரே செட்டில்மெண்டாக பணத்தை செலுத்தி சிலரால் வீடு வாங்க முடியாது. இதன் காரணமாக பலர் ஹோம் லோன்களை நம்பியுள்ளனர். ஆனால் ஹோம் லோன்களை எடுத்துவிட்டு அதன் பிறகு ஈஎம்ஐ செலுத்த சிரமப்படுகின்றனர். விரைவாக ஹோம் லோன் கடனிலிருந்து விடுபட விரும்பினால் நீங்கள் அதிக ஈஎம்ஐ தொகையை செலுத்த வேண்டும். அதற்கு SIP முதலீட்டைப் பயன்படுத்தலாம். இந்தப் பதிவில் SIP முதலீட்டின் மூலம் எப்படி உங்களுடைய ஹோம் லோனை விரைவாக அடைத்து முடிக்கலாம் என்று பார்ப்போம்.
வீட்டுக்கடனுக்கான SIP: வீட்டுக்கடனை SIP மூலம் செலுத்த, நீங்கள் விரைவில் ஈக்விட்டி சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளானில் முதலீடு செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவு சீக்கிரமாக SIP முதலீட்டை தொடங்குகிறீர்களோ? அந்த அளவுக்கு உங்களுடைய ஈஎம்ஐ-களை வைத்து ஈடு செய்ய முடியும்.

SIP மூலம் ஹோம் லோனை எவ்வாறு திருப்பிச் செலுத்துவது?: நீங்கள் ரூ.50 லட்ச ரூபாய் ஹோம் லோன் பெற விண்ணப்பித்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு 20 ஆண்டுகள் தொடர்ந்து EMI செலுத்த வேண்டும். மேலும் 9% வட்டி விகிதத்தில் மாதத்திற்கு 44,896 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே நீங்கள் SIP முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்றால் மாதம் குறிப்பிட்ட அளவு தொகையை முதலீடு செய்து வரலாம்.
அதுவே SIP முதலீட்டை தொடங்குகிறீர்கள் என்றால் மாதத்திற்கு ரூ.5,500 முதலீடு செய்ய வேண்டும். நாங்கள் முதலீட்டு தொகையை 50 லட்சம் ரூபாய் லோனுக்கு ஏற்றபடி எடுத்துக் கொண்டோம். நீங்கள் வாங்க இருக்கும் லோனுக்கு தகுந்தாற் போல எஸ்ஐபி முதலீட்டை தொடங்கலாம். 12 சதவீத வட்டி விகிதத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகளுக்குள் 54,95,314 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
EMI தொகை 20 வருடங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் எஸ்ஐபி முதலீட்டை குறைந்த தொகையில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப அதிகரிக்கலாம். அப்படி அதிகரித்தால் தொகை இன்னும் அதிகரிக்கும்.
கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்: நிதி நிபுணர்களின் கூற்றுப்படி, வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு முன்பு SIP மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், போதுமான வருமானத்தை உருவாக்க உங்களுக்கு போதுமான நேரம் கிடைக்கும்.
இரண்டாவதாக, வீட்டுக் கடன் EMI-களை ஈடுகட்ட SIPகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் நிதி நிலையை கண்காணிக்கவும். வீட்டுக் கடன் EMIகளுக்கு SIPகளை மட்டுமே நம்பி இருக்காதீர்கள்.
EMIகளை ஈடுகட்ட நிலையான வருமான ஆதாரத்தை உறுதிசெய்து, கூடுதல் முதலீட்டு விருப்பமாக SIP-களை ஆராயுங்கள். வீட்டுக் கடன் EMI-யை ஈடுகட்ட தேவையான SIP தொகையைக் கணக்கிடுங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications