சமீபத்தில் சீனா தனது பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தைக் கருத்தில் கொண்டு, நீண்ட காலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருந்த ஒரு பிள்ளை திட்டத்தை ரத்து செய்தது.
தற்போது இதைவிடப் பெரிய பிரச்சனை உலக நாடுகளில் குறிப்பாகப் பணக்கார நாடுகளில் உருவாகியுள்ளது. தற்போது மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் இல்லாமல் இருந்தால் 2045க்குள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 50 சதவீத ஆண்கள் ஆண்மையற்றவர்களாக இருப்பார்கள்.
இது சர்வதேச பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
விந்தணு எண்ணிக்கை
பருவ நிலை மாற்றம், கடல் நீர் மட்டம் உயர்தல் எனப் பல பிரச்சனைகளை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் நிலையில் மக்கள் மத்தியில் குறைந்து வரும் விந்தணு எண்ணிக்கை பிரச்சனை உடல்நல பிரச்சனையாக மட்டும் அல்லாமல் வர்த்தகப் பொருளாதாரப் பிரச்சனையாகவும் உயர்ந்துள்ளது.
185 ஆய்வின் முடிவுகள்
விந்தணு எண்ணிக்கை குறித்து 1973 முதல் 2011 வரையில் செய்யப்பட்ட 185 ஆய்வுகள் அடிப்படையில் இதன் எண்ணிக்கை இக்காலகட்டத்தில் 25 சதவீதம் வரையில் குறையும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
50 சதவீதம் சரிவு
ஆனால் சமீபத்தில் இந்த ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாக வைத்து ஆணின் வயது, உடலில் இருக்கும் நச்சுத் தன்மை மற்றும் தற்போதைய வாழ்க்கை முறையை வைத்து மறு ஆய்வு செய்யும் போது விந்தணு எண்ணிக்கை மேற்கத்திய நாடுகளில் 50 சதவீதம் வரையில் குறைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை வளரும் நாடுகளிலும் தொடர்வதாகக் கண்டறியப்பட்டு உள்ளதாகத் தி எக்னாமிஸ்ட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
Shanna Swan ஆய்வு
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் Shanna Swan மற்றும் 7 ஆராய்ச்சியாளர்கள் 55 நாடுகளைச் சேர்ந்த 43,000 ஆண்களிடம் செய்த ஆய்வுகள் அடிப்படையில் இப்புதிய மறு ஆய்வை 2017ல் செய்துள்ளது இந்த ஆராய்ச்சி குழு.
கவுண்ட் டவுன் புத்தகம்
Shanna Swan வெளியிட்டுள்ள கவுண்ட் டவுன் புத்தகம் இந்த ஆண்டு வெளியானது, இதில் விந்தணு எண்ணிக்கை 50 சதவீதம் வரையில் குறைய முக்கியமான காரணம் உடலி அதிகரிக்கப்படும் பிஸ்பெனால் ஏ (பிபிஏ) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் தாக்கம் தான் எனக் கூறுகிறார்.
பிஸ்பெனால் ஏ (BPA)
பிஸ்பெனால் ஏ (BPA) என்றால் ஏதோ பெரிய கெமிக்கல் என நினைத்துவிட வேண்டாம், நாம் வீட்டில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் இருப்பது தான். இந்தப் பிஸ்பெனால் ஏ ( bisphenol A -BPA) மனித உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஆகியவற்றை அதிகம் பாதிப்பதாகவும், இது ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை குறைய அதிகளவில் வாய்ப்பு உள்ளதாகவும் Swan தெரிவித்துள்ளார்.
காற்று மாசுபாடு
விந்தணு எண்ணிக்கை குறையப் பிஸ்பெனால் ஏ மட்டும் காரணம் இல்லை, இத்தாலி மக்கள் மத்தியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில்
காற்று மாசுபாடு முக்கியக் காரணமாக விளங்கியுள்ளது. இப்படிப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் Swan பிஸ்பெனால் ஏ (BPA) பாதிப்பை முக்கியமானதாகக் கூறுகிறார்.
ஐரோப்பிய யூனியன் REACH
2007ல் விந்தணு எண்ணிக்கை குறைப்பு மற்றும் இதர உடல் நல பிரச்சனையை உணர்ந்த ஐரோப்பிய யூனியன் REACH கட்டுப்பாடுகளை அமலாக்கம் செய்தது, இதன் பின்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குழந்தைகள் பயன்படுத்தும் பாட்டில்களில் BPA கொண்ட பாட்டில்களை மொத்தமாகத் தடை செய்தது.
ஆனாலும் இன்னும் மக்களின் உணவு சங்கிலியில் BPA-வை முற்றிலும் அகற்ற முடியவில்லை எனக் கவுண்ட் டவுன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.
50 சதவீத ஆண்கள்
மக்களின் தற்போதைய வாழ்க்கை முறை தொடர்ந்தால் 2045ஆம் ஆண்டுக்குள் பணக்கார நாடுகளாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 50 சதவீத ஆண்கள் ஆண்மையற்றவர்களாக (impotent) இருப்பார்கள் என Shanna Swan-னின் 2017 ஆய்வுகள் கூறுகிறது.
பொருளாதார வளர்ச்சி
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் பிரச்சனை, குறைவாக இருந்தாலும் பிரச்சனை.
மக்கள் தொகை தொடர்ந்து குறைந்தால் வர்த்தக அளவுகள் குறையும், உற்பத்தி குறையும், ஏற்றுமதி குறையும், வேலைவாய்ப்பு குறையும், வருமானம் குறையும். இப்படிப் பல பிரச்சனைகள் தொடர்ந்து பாதிப்புகளை உருவாக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications