ஸ்பைஸ்ஜெட் கொடுத்த சூப்பர் ஆஃபர்.. 3 மாத வட்டியில்லா கடன்..!

இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றான ஸ்பைஸ்ஜெட் புதிய வாடிக்கையாளர்களை மட்டும் இல்லாமல் முதல் முறை பயணிகளையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காகத் தனது டிக்கெட் புக்கிங் சேவை தளத்தில் புதிய ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய ஈகாமர்ஸ் சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் பை நவ் பே லேட்டர் பேமெண்ட் சேவையை விமானத் துறையில் கொண்டும் வரும் முயற்சியில் சில மாதங்களுக்கு முன் ஸ்பைஜெட் இறங்கியது.

ஸ்பைஸ்ஜெட்

ஸ்பைஸ்ஜெட்

இந்தியாவின் முன்னணி மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் திங்கட்கிழமை தனது டிக்கெட் புக்கிங் சேவையில் முதல் முறையாகப் புக் நவ் பே லேட்டர் (Book Now Pay Later) பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

 அதிகச் சேமிப்பு

அதிகச் சேமிப்பு

இது தற்போது பயன்படுத்தப்படும் கிரெட்டி கார்டு சேவையை விடவும் அதிகப்படியான லாபத்தை விமானப் பயணிகளுக்கு அளிக்கும் காரணத்தால் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த விமானச் சேவை தளத்தில் இது பெரும் மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது.

 புக் நவ் பே லேட்டர்

புக் நவ் பே லேட்டர்

தற்போது கிரெடிட் கார்டு மூலம் ஒருவர் விமான டிக்கெட்-ஐ பெறுவதற்கும் புக் நவ் பே லேட்டர் பேமெண்ட் சேவை மூலம் விமான டிக்கெட் பெறுவதிலும் ஒருவர் 70 சதவீத வட்டி தொகையைச் சேமிக்க முடியும். புக் நவ் பே லேட்டர் திட்டத்தில் வட்டி விகிதம் கிரெடிட் கார்டு சேவையை விடவும் மிகவும் குறைவு.

 3 மாதம் ஈஎம்ஐ

3 மாதம் ஈஎம்ஐ

மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகம் சலுகையாகப் புக் நவ் பே லேட்டர் திட்டத்தின் கீழ் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு 3 மாதம் ஈஎம்ஐ-க்கு எவ்விதமான வட்டியும் இல்லை என அறிவித்துள்ளது. இதனால் ஒரு வாடிக்கையாளர் அதிகப்படியான தொகையைச் சேமிக்க முடியும்.

 பை நவ் பே லேட்டர் என்றால் என்ன..?

பை நவ் பே லேட்டர் என்றால் என்ன..?

முதலில் பை நவ் பே லேட்டர் அல்லது புக் நவ் பே லேட்டர் சேவையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், இத்திட்டத்தின் மூலம் பொருளையோ அல்லது சேவையையோ இலவசமாக வாங்கிக்கொள்ள முடியும், ஆனால் அதற்கான தொகையைக் குறிப்பிட்ட காலத்திற்குத் தவணை முறையில் செலுத்த வேண்டும். இந்தச் சேவையின் கீழ் வாங்கும் கடனுக்கு 15 நாள் முதல் 45 நாள் வரையில் வட்டியில்லை என்பதால் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

 பான் - ஆதார் எண்

பான் - ஆதார் எண்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் ஒருவர் விமான டிக்கெட் புக்கிங் செய்ய வேண்டும் என்றால் பான் எண், ஆதார் எண் ஆகியவற்றைக் கொடுத்து OTP மூலம் உறுதி செய்யப்பட்ட பின்பு விமான டிக்கெட்-ஐ புக் நவ் பே லேட்டர் திட்டத்தின் கீழ் பெற்று டிக்கெட் தொகையை ஈஎம்ஐ ஆக மாற்றிக்கொள்ள முடியும்.

 முக்கிய வங்கிகள்

முக்கிய வங்கிகள்

தற்போது ஸ்பைஸ்ஜெட் புக் நவ் பே லேட்டர் சேவையை ஆக்சிஸ் வங்கி, ஹெச்எஸ்பிசி வங்கி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, எஸ்பிஐ, ஸ்டாண்டர்ட் சார்ட்டெட் ஆகியவற்றுடன் இணைந்து அளிக்கிறது. விரைவில் இதர பல வங்கிகளுடன் இணைந்து சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.

 வட்டி விகித வித்தியாசம்

வட்டி விகித வித்தியாசம்

கிரெடிட் கார்டு மூலம் நேரடியாக விமான டிக்கெட் புக்கிங் செய்யும் போது 36 சதவீதம் வட்டி விதிக்கப்படும், ஆனால் புக் நவ் பே லேட்டர் திட்டத்தில் 12 சதவீதம் முதல் அதிகப்படியாக 14 சதவீதம் வட்டி மட்டுமே விதிக்கப்பட உள்ளது. உதாரணமாக 5000 ரூபாய்க்கு டிக்கெட்-க்கு 12 மாதம் ஈஎம்ஐ செலுத்தினால் 1000 ரூபாய்-ஐ புக் நவ் பே லேட்டர் திட்டத்தில் சேமிக்க முடியும்.

 BNPL வட்டி விகிதம்

BNPL வட்டி விகிதம்

ஆக்சிஸ் வங்கி - 12% (3 மாதம்), 12% (6 மாதம்), 13% (9 மாதம்), 13% (12 மாதம்)
ஸ்டாண்டர்ட் சார்ட்டெட் - 13% (3 மாதம்), 13% (6 மாதம்), 14% (9 மாதம்), 14% (12 மாதம்)
ஹெச்எஸ்பிசி வங்கி - 12.50% (3 மாதம்), 12.50% (6 மாதம்), 13.50% (9 மாதம்), 13.50% (12 மாதம்)
கோட்டாக் மஹிந்திரா வங்கி - 12% (3 மாதம்), 12% (6 மாதம்), 14% (9 மாதம்), 14% (12 மாதம்)
எஸ்பிஐ வங்கி - 14% (3 மாதம்) 14% (6 மாதம்), 14% (9 மாதம்), 14% (12 மாதம்)

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+