நாட்டில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்கங்களை அறிவித்து வரும் நிலையில் 2024-ஆம் நிதியாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.. இதில் பர்மனென்ட் மற்றும் நான்-பர்மனென்ட் ஊழியர்கள் உட்பட பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2024-ஆம் நிதியாண்டில் 716 பர்மனென்ட் ஆண் ஊழியர்கள் மற்றும் 618 பெர்மனெண்ட் பெண் ஊழியர்கள், இவர்களோடு 531 நான்-பர்மனென்ட் ஆண் ஊழியர்கள் மற்றும் 30 நான்-பர்மனண்ட் பெண் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை விமான நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிதி சீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த லேஆஃப் நடந்த போதிலும்.. குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகம் சம்பளம் பெறும் பணியாளர்களின் சதவீதமும் அதிகரித்துள்ளது. இதில் நிரந்தர பணியாளர்களின் சம்பளம் 61 சதவீதத்திலிருந்து இருந்து 74 சதவீதமாகவும், பெண்களின் சம்பளம் 37 சதவீதத்திலிருந்து 56 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இதில் தற்காலிக பணியாளர்களை பொருத்தவரையில் ஆண்களின் சம்பளம் 1 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகவும், பெண்களின் சம்பளம் 2 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் பாலின ஊதிய வேறுபாடு தொடர்கதையாக உள்ளது.
நிறுவனத்தின் செயல் திறன்: 2024-ஆம் நிதியாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் போனஸ் 9 சதவீதம் குறைந்து ரூ. 7,705.44 மில்லியனாக குறைந்துள்ளது. பணி நீக்கத்தின் காரணமாக இந்த குறைவு ஏற்பட்டுள்ளது. நிறுவனத்தின் சேர்மன் மற்றும் மேனேஜிங் டைரக்டரான அஜய் சிங் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை விட சுமார் 211 மடங்கு அதிகமான சம்பளம் பெறுகிறார். இவருடைய சம்பளம் ரூ.54 கோடி ஆகும்.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானமும் 14 சதவீதம் சரிந்து 84,969.69 மில்லியனாக உள்ளது. அதேபோல ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் இயக்க வருவாய் 21 சதவீதம் சரிந்து 70,499.74 மில்லியனாக குறைந்துள்ளது. விமானத்தின் எரிபொருள் செலவுகள் 37 சதவீதம் குறைந்து ரூ. 29,825.62 மில்லியன் ஆக உள்ளது.
தொடர்ந்து பணி நீக்கங்கள் வெவ்வேறு துறைகளிலும் நடைபெற்று வருவது ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ed-tech துறையும் நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு வருகிறது. இதனால் இது போன்ற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களும் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications