இந்தியாவில் ட்ரோன் டெலிவரி சேவை.. ஸ்பைஸ்ஜெட் மெகா திட்டம்..!

இந்தியாவின் மலிவு விலை விமானச் சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வாடிக்கையாளர்களை அதிகளவில் ஈர்த்து வருகிறது. குறிப்பாகக் கொரோனாவுக்குப் பின் மத்திய அரசு விமானப் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த பின்பு புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இதே வேளையில் உலக நாடுகளில் பிரபலமாகவும், வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வரும் ட்ரோன் டெலிவரி சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற மிகப்பெரிய திட்டத்தைத் தீட்டி வருகிறது. இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் தனது லாஜிஸ்டிக்ஸ் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியும் என நம்புகிறது.

 ட்ரோன் டெலிவரி

ட்ரோன் டெலிவரி

அமெரிக்கா உட்பட உலகில் பல நாடுகளில் தற்போது ஈகாமர்ஸ், உணவு நிறுவனங்கள், மருத்துவப் பொருட்கள் எனப் பல துறை நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரியை சிறப்பான முறையில் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும் பெரிய நிறுவனங்கள் இதுவரை முன்வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

 இந்தியாவுக்குச் சரியா..?

இந்தியாவுக்குச் சரியா..?

இந்தியா போன்ற டிராபிக் நிறைந்த நாட்டில் டிரோன் டெலிவரி எந்த அளவிற்கு நன்மை அளிக்கிறதோ அதே அளவிற்குப் பல பிரச்சனைகளையும் கொண்டு உள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஸ்பைஸ்ஜெட் போன்ற பெரு நிறுவனங்கள் வருவது புதிய வர்த்தக வழித்தடத்தை உருவாக்க முடியும்.

 ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது லாஜிஸ்டிக்ஸ் பிளாட்பார்ம் பிரிவின் கீழ் இந்தப் புதிய ட்ரோன் டெலிவரி சேவையைக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. புதிய சேவைக்காக 0-5 கிலோ, 5-10 கிலோ, 10-25 கிலோ எடையைத் தாங்கும் அளவிற்காக டிரான்-ஐ உருவாக்கவும் இயக்கவும் திட்டமிட்டு உள்ளது.

 இந்திய சப்ளை செயின்

இந்திய சப்ளை செயின்

மேலும் இந்திய சப்ளை செயின்-க்கு ஏற்றவாறு மீள் மற்றும் நிலையான டிரான்களை மறுஉருவாகம் செய்யவும் ஸ்பைஸ்ஜெட் திட்டமிட்டு உள்ளது. முதற்கட்டமாக மிட் ரேன்ஜ் டிரான் டெலிவரி சேவைகளை அறிமுகம் செய்து அதன் பின் நீண்ட துர டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

 அஜய் சிங்

அஜய் சிங்

இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர் அஜய் சிங் கூறுகையில், ஸ்பைஸ்ஜெட் தொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தைப் பரிசோதனை செய்து வருகிறது. இதன் மூலம் விரைவில் இந்தியாவில் டிரோன் டெலிவரி சேவையைத் துவங்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சேவை ஸ்பைஸ்ஜெட் எக்ஸ்பிரஸ் பிரிவில் கீழ் இயங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

 ஈகாமர்ஸ், உணவு , மருத்து

ஈகாமர்ஸ், உணவு , மருத்து

ஸ்பைஸ்ஜெட் இந்த டிரோன் டெலிவரி சேவையை ஈகாமர்ஸ், உணவு , மருத்து எனப் பெரும்பாலான அனைத்து ஆன்லைன் சேவை நிறுவனங்களுக்கும் அளிக்க முடியும். இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் ரீடைல் சப்ளை செயின் பிரிவில் அதிகளவிலான வர்த்தகத்தை உருவாக்க முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+