ஏர் இந்தியா விபத்தில் இருந்து மீளாத விமான பயணிகளுக்கு அடுத்தாக ஒரு அதிர்ச்சி தகவல். ஹைதராபாத் முதல் திருப்பதி செல்லும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் Q400 விமானம், ஜூன் 19, 2025 அன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் மின்சார பிரச்சினையை எதிர்கொண்டதால், பிரச்சனை பெரிதாவதற்கு முன்பு விமானி முன்னெச்சரிக்கையாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரும்பினார்.
இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், பயணிகள் அனைவரும் சாதாரணமாக இறக்கப்பட்டதாகவும், மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், 2025 மார்ச் காலாண்டில் 173% லாப உயர்வுடன் ₹324.87 கோடி நிகர லாபத்தையும், FY25 முழு ஆண்டில் ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக ₹48 கோடி நிகர லாபத்தையும் பதிவு செய்து மூலம் அதன் பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று 0.76 சதவீதம் சரிந்து 41.85 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
ஹைதராபாத்-திருப்பதி விமானத்தில் என்ன நடந்தது?
ஜூன் 19, 2025 அன்று, ஹைதராபாத் முதல் திருப்பதி செல்லும் ஸ்பைஸ்ஜெட் Q400 விமானம், புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் பின்புற கதவு விளக்கு (AFT Baggage Door Light) இடைவிடாமல் ஒளிர்ந்ததால், மின்சார பிரச்சினையை எதிர்கொண்டது. இதனால், விமானி முன்னெச்சரிக்கையாக விமானத்தை ஹைதராபாத் திரும்ப முடிவு செய்தார்.
இதுக்குறித்து ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "விமானத்தின் காற்றழுத்த அமைப்பு (Cabin Pressurization) இயல்பாகவே இருந்தது. இனால் இது எமர்ஜென்சி தரையிறக்கம் இல்லை, மாறாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான ஹைதராபாத்-க்கு திருப்பப்பட்டது. மேலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, பயணிகள் சாதாரணமாக இறக்கப்பட்டனர்." என்று விளக்கினார்.
ஸ்பைஸ்ஜெட்டின் நடவடிக்கைகள்:
அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டு, எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது ஸ்பைஸ்ஜெட். மேலும் பயணிகள் திருப்பதிக்கு பயணத்தைத் தொடர, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பிரச்சினைக்கு காரணமான விமானம், முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சம்பவம், திருப்பதி செல்லும் ஆன்மீக பயணங்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு பயத்தை ஏற்படுத்தினாலும், ஸ்பைஸ்ஜெட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications